twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடிகார முள்ளாக மாறிய ஹவுஸ்மெட்ஸ்.. மணிகூண்டு டாஸ்க்கை கொடுத்து பெண்டை கழட்டிய பிக்பாஸ்!

    |

    சென்னை: ஹவுஸ்மெட்ஸ்களுக்கு மணி கூண்டு டாஸ்க்கை கொடுத்து கழட்டிவிட்டார் பிக்பாஸ்.

    பிக்பாஸ் நிகழ்ச்சயில் வாரம்தோறும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் அடிப்படையில் ஹவுஸ்மெட்ஸ் பெறும் மதிப்பெண்களை பொறுத்து அந்த வாரத்திற்கான மளிகை பொருட்கள் ஹவுஸ்மெட்ஸ்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

    கிரைம் ரேட் கூடிட்டே போகுதே.. சுச்சியை அப்படியே அலேக்கா தூக்கிட்டுப் போன பாலா.. நொறுங்கலன்னா சரி!கிரைம் ரேட் கூடிட்டே போகுதே.. சுச்சியை அப்படியே அலேக்கா தூக்கிட்டுப் போன பாலா.. நொறுங்கலன்னா சரி!

    முட்டை மதிப்பெண்கள்

    முட்டை மதிப்பெண்கள்

    கடந்த வாரம் கொடுக்கப்பட்ட லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கான பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் பாலாஜி தவறாக விளையாடினார். இதனால் மொத்த கோட்டையும் அழித்த பிக்பாஸ் முட்டை மதிப்பெண்களை கொடுத்தார்.

    பரிசாக வழங்கப்பட்டது

    பரிசாக வழங்கப்பட்டது

    இதனால் கடந்த வாரம் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையால் அவதிப்பட்டனர் ஹவுஸ்மெட்ஸ். அர்ச்சனாவும் நிஷாவும் பிக்பாஸிடம் பிக்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இருந்த போதும் தீபாவளியின் தயவால் அனைத்து பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டதால் தப்பித்தனர்.

    5 அணிகள்

    5 அணிகள்

    இந்நிலையில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் தொடர்ந்து 45 மணிநேரம் நடைபெறுகிறது. இதில் ஹவுஸ்மெட்ஸ் தலா 3 பேராக 5 அணிகளாக பிரிந்தனர்.

    நேரத்தை கணிக்க வேண்டும்

    நேரத்தை கணிக்க வேண்டும்

    அந்த மூன்று பேரும் சின்னமுள், பெரியமுள் மற்றும் நொடி முள்ளாக நேரத்தை கணிக்க வேண்டும். ஒவ்வொரு டீமும் 3 மணி நேரத்தை சரியாக கணிக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். கொடுக்கப்பட்டுள்ள நேரத்தின் அடிப்படையில்தான் பிக்பாஸ் வீட்டிற்கு தண்ணீர், கேஸ், சமையல் உள்ளிட்ட அனைத்தும் கொடுக்கப்படுகிறது.

    3 மணி நேரம் 18 நிமிடங்கள்

    3 மணி நேரம் 18 நிமிடங்கள்

    அவர்களில் அனிதா, சனம், நிஷா ஒரு டீமாக இருந்தனர். அந்த டீம் வெயிலில் காய்ந்தனர். இருந்த போதும் 3 மணி நேரத்தை கணிக்க 3 மணி நேரம் 18 நிமிடங்கள் எடுத்துக்கொண்டனர்.

    கொட்டும் மழையில்

    கொட்டும் மழையில்

    அடுத்து வந்த பாலா, சுச்சி, ரம்யா ஆகியோர் கொட்டும் மழையில் குடையை பிடித்தப்படி 3 மணி நேரத்தை கணித்தனர். ஆனால் அந்த 3 மணி நேரத்தை கணிக்க 4 மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக் கொண்டனர்.

    ஆடி டீம் வேற லெவல்

    ஆடி டீம் வேற லெவல்

    அவர்களை தொடர்ந்து ஆரி, ரியோ, கேபி ஆகியோர் ஒரு டீமாக இருந்தனர். அவர்கள் மூன்று மணி நேரத்தை கணிக்க 3 மணி நேரம் 1 நிமிடம் மட்டுமே எடுத்துக் கொண்டனர்.

    3 மணி நேரம் 8 நிமிடங்கள்

    3 மணி நேரம் 8 நிமிடங்கள்

    அவர்களை தொடர்ந்து அர்ச்சனா, சம்யுக்தா மற்றும் சோம சேகர் ஆகியோர் கடிகாரமாக இருந்தனர். அவர்கள் 3 மணி நேரத்தை கணிக்க 3 மணி நேரம் 8 நிமிடங்கள் எடுத்துக்கொண்டனர்.

    English summary
    Biggboss has given Clock task for housemates. This task is the luxury budget task and it will be continue for 45 hours.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X