»   »  "ரொம்ப ஓவராத்தான் போறீங்கய்யா..." ஜூலி நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா?

"ரொம்ப ஓவராத்தான் போறீங்கய்யா..." ஜூலி நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிக் பாஸ் புகழ் ஜூலி நடிக்கும் படத்தின் பெயர் உத்தமி

சென்னை : கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் பிரபலமாகிவிட்டார்கள். ஓவியா உள்ளிட்ட பலருக்கும் இந்த நிகழ்ச்சியின் மூலம் நல்ல பட வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் 'வீர தமிழச்சி' என பெயர் பெற்ற ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெறுப்பைச் சம்பாதித்தார்.

விளம்பரப் படங்களில் நடித்த ஜூலி இப்போது ஹீரோயினாக நடித்து வருகிறார். ஜூலி நடிக்கும் படத்தின் டைட்டில் 'உத்தமி' என வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தொகுப்பாளினி ஜூலி

தொகுப்பாளினி ஜூலி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், சினிமா பிரபலம் அல்லாத ஜூலியானா கலைஞர் டி.வி-யில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

விளம்பர படத்தில் ஜூலி

விளம்பர படத்தில் ஜூலி

இந்நிலையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடை ஒன்றின் விளம்பரப் படத்திலும், சில நாட்களுக்கு முன்பு அப்பள நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றிலும் நடித்தார். அப்பள கம்பெனி விளம்பரத்தில் குடும்பத் தலைவியாக நடித்திருக்கிறார் ஜூலி.

ஜூலி நடிக்கும் படம்

ஜூலி நடிக்கும் படம்

ஜூலி நடிக்கும் படத்தை K7 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவருக்கு ஜோடியாக 'தப்பாட்டம்', 'ஜூலியும் 4 பேரும்' போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடிக்கிறார். இந்த படத்தில் ஜூலி அவரது சொந்தப் பெயரில் தான் நடிக்கிறாராம்.

சமூக அக்கறை கொண்ட பெண்ணாக ஜூலி

சமூக அக்கறை கொண்ட பெண்ணாக ஜூலி

இந்தப் படத்தின் கதைப்படி ஜூலி, சமூக அக்கறை கொண்ட ஒரு பெண்ணாக நடிக்கிறாராம். அதனால், இந்தப் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் ஜூலிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

உத்தமி

உத்தமி

ஜூலி நடிக்கும் இந்தப் படத்திற்கு தற்போது 'உத்தமி' என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளதாகத் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

English summary
Julie, who is known as 'Veera Thamizhachi' by the Jallikattu struggle, participated in the Biggboss show. Julie starring in commercials is now acting as heroine. The news is reported that, 'Uththami' in the title of julie's film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X