»   »  சிவனேனு இருக்கும் சிம்புவை வம்புக்கு இழுக்கும் பிக்பாஸ்!

சிவனேனு இருக்கும் சிம்புவை வம்புக்கு இழுக்கும் பிக்பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழில் கமல்ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது.

பலர் கலந்துகொண்டு பிரம்மாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே இருக்கின்றன.

இறுதியாகத் தற்போது நிகழ்ச்சியில் 5 பேர் உள்ளனர். இவ்வார நடுவில் ஒருவர் எலிமினேட் செய்யப்பட்டு 4 போட்டியாளர்கள் தான் இருப்பார்கள் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் ரஜினி, சிம்பு :

பிக்பாஸ் வீட்டில் ரஜினி, சிம்பு :

இந்த நிலையில் இன்று புதிதாக வந்த பிக்பாஸ் ப்ரொமோவில் ஆரவ் ரஜினியாகவும், பிந்து மாதவி நயன்தாராவாகவும், ஹரீஷ் சிம்புவாகவும் நடிக்கின்றனர்.

ரஜினியாக நடிக்கும் ஆரவ் :

ரஜினிகாந்த்தின் மேனரிசங்களைப் போலவே ஆரவ் செய்துகாட்டி வருகிறார். ரஜினியைப் போல வேகமாக நடந்து வந்து அவரைப் போலவே பேசுகிறார். நயந்தாராவாக நடிக்கும் பிந்து மாதவியிடம் 'நாம கடைசியா சந்திரமுகி பண்ணோம்ல... அதுக்கப்புறம் சேர்ந்து படம் பண்ணலையா?' எனக் கேட்கிறார்.

தொட்டுப் பேசாதப்பா :

தொட்டுப் பேசாதப்பா :

சிம்புவாக நடிக்கும் ஹரீஷ் பிந்து மாதவி தோளில் கைபோட, 'தொட்டுப் பேசாதப்பா... ரொம்பத் தப்பு' எனச் சொல்கிறார் ரஜினியாக நடிக்கும் ஆரவ். சிம்புவைப் போலவே பேசும் ஹரீஷ் பிக்பாஸ் வீட்டில் நயன்தாராவிடம் பேசிவிட்டு ஹன்சிகாவைத் தேடுகிறார்.

சிம்பு பாவம் :

சிம்பு பாவம் :

இதனை பார்த்த சிம்பு ரசிகர்கள், 'சிவனேனு இருக்குறவரை ஏம்ப்பா கலாய்க்குறீங்க' எனக் கேட்டுவருகிறார்கள். நிஜமாகவே அவர் இந்த வீட்டிக்குள் சிறப்பு விருந்தினராக வந்தால் நன்றாக இருக்குமே என்றும் சிலர் தங்களது விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

English summary
There are only six days to complete the Biggboss show. In this case, Aarav, harish and bindhu are respectively acting like Rajini, Simbu and Nayantara. Harish talking to Nayanthara who plays Simbu, he is looking for Hansika.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil