செம்ம்ம ஜாக்பாட்.. விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா.. என்னா ஸ்பீடு!

சென்னை: பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் பங்கேற்ற சம்யுக்தா விஜய் சேதுபதியின் படத்தில் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சம்யுக்தா நியூட்ரனிஸ்ட், யோகா கலைஞர், பிஸ்னஸ் வுமன், மாடல், நடிகை, ஃபேஷன் டிசைனர் என பல முகங்களை கொண்டுள்ளார்.

2007ஆம் ஆண்டுக்கான மிஸ் சென்னை பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார் சம்யுக்தா. ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

சந்திரகுமாரி சீரியல்

சந்திரகுமாரி சீரியல்

2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியனா ஊலு என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து அதே ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ராதிகா சரத்குமாரின் சந்திரகுமாரி சீரியலிலும் நடித்தார் சம்யுக்தா.

ஒரு மகன்

ஒரு மகன்

கார்த்திக் என்பவரை திருமணம் செய்துள்ள சம்யுக்தாவுக்கு ரேயான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சம்யுக்தா. இதில் ஆரம்பத்தில் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் ரசிகர்களின் குட் புக்கில் இடம் பெற்றார்.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் பாலாஜியுடன் ரொம்ப நெருக்கமனார். குறிப்பாக பாலாஜியின் தயவால் கேப்டனான சம்யுக்தா பாலாஜி செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருந்தார். இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

குறும்படம் போட்ட கமல்

குறும்படம் போட்ட கமல்

தொடர்ந்து ஆரியையும் அவன் இவன் என தரக்குறைவாக பேசினார். ஆரி தன்னுடைய தாய்மையை கேவலப்படுத்தியதாக கூறி கதறி அழுதார். ஆனால் ஆரி அப்படி தவறாக பேசவில்லை என கூறிய கமல், குறும்படம் போட்டு விளக்கினார்.

விஜய் சேதுபதியுடன்

விஜய் சேதுபதியுடன்

ஆனால் திருப்தி அடையாத சம்யுக்தா, ஆரி பேசியது தவறுதான் என்றார். வெளியில் வந்தும் ஆரிக்கு எதிராகவே பேசி வருகிறார் சம்யுக்தா. இந்நிலையில் சம்யுக்தா விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

துக்ளக் தர்பார்

துக்ளக் தர்பார்

அதாவது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாராம் சம்யுக்தா. அவர் நடிக்கும் பாத்திரத்திற்கான படப்பிடிப்பு கூட நிறைவடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

போஸ்ட் புரடெக்ஷன்

போஸ்ட் புரடெக்ஷன்

துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ராஷி கன்னா ஆகியோர் லீடிங் ரோலில் நடிக்கின்றனர். மேலும் பார்த்திபன், கருணாகரன், ராஜ், பக்ஸ் பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். விரைவில் முழு படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X