Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வீடும் பெருசு.. கலாட்டாவும் பெருசு.. எதிர்பாராததை எதிர்பாருங்கள்: வெளியானது பிக்பாஸ்5 கலக்கல் ப்ரோமோ!
சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கலக்கல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 5வது சீசனை எட்டியுள்ளது.
வழக்கமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாக தொடங்கியது.
பிக்பாஸ்
சீசன்
5
ல்
பங்கேற்கும்
பிரபல
ஆர்ஜே..
யாருன்னு
பாருங்க..
தீயாய்
பரவும்
தகவல்!

கொரோனா இரண்டாவது அலை
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த ஆண்டாவது ஜூன் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்கி விடலாம் என எதிர்பார்த்தது நிகழ்ச்சி குழு. ஆனால் இந்த ஆண்டும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

போட்டியாளர்களிடம் பேச்சு வார்த்தை
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அக்டோபர் மாதம்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்குவதற்கான பணிகளில் நிகழ்ச்சி குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

பிரபலங்களின் பெயர்கள்
இதுவரை 30 பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் சில போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகை சூசன், ஆர்ஜே வினோத், நடிகர் அபினய், நடிகை சாந்தினி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரகசியமாக இருக்க வேண்டும்
அதேநேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் உறுதியாகிவிட்டது என்றும் ஆனால் அது ரகசியமாக இருக்க வேண்டும் என போட்டியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உறுதி செய்யப்பட்ட பிரபலங்கள் கூட வாயை திறக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.

பிக்பாஸ் லோகோ ப்ரோமோ
பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோ படப்பிடிப்பில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் பங்கேற்ற போட்டோக்கள் அண்மையில் வெளியானது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் லோகோ அறிமுக புரமோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது.

கல்யாண வீட்டு கலாட்டாக்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ படப்பிடிப்பில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் பங்கேற்ற போட்டோக்கள் அண்மையில் வெளியானது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் லோகோ அறிமுக ப்ரோமோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது.

பற்ற வைக்கும் உறவுகள்
மருமகளுக்கு நகை போட்டு விடும் மாமியார்.. மருமகனுக்கு பாலும் பழமும் ஊட்டி விட்டு மேலே சிந்துவதை துடைத்து விடும் மாமியார் என கலக்கலாக ஆரம்பிக்கும் கல்யாணத்தில், அசத்தல் செல்பி என களைக்கட்டுகிறது. அடுத்த சில மணி நேரங்களில் திருமணத்திற்கு வரும் உறவினர்கள், மாப்பிள்ளையை பற்றி குறை சொல்லி பேசி பற்ற வைக்கிறார்கள். அதை கேட்கும் மாப்பிள்ளையின் தாயார், சாப்பாட்டு விஷயத்தில் பிரச்சனையை கிளப்புகிறார்.

கலாட்டா வீடாகும் கல்யாண வீடு
இப்படியாக கல்யாண வீடு கலாட்டா வீடாக மாறுகிறது. மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது உள்ளே நுழையும் கமல் ஃபிரீஸ் சொல்லி அமைதியாக்குகிறார். தொடர்ந்து பேசும் கமல், என்ன பாக்குறீங்க.. ஆயிரம் பொருத்தம் பார்த்து பண்ற கல்யாண வீட்டிலேயே இவ்ளோ கலாட்டா இருக்கத்தான் செய்யும். இங்கேயே இப்படின்னா.. என்று இழுக்கிறார் கமல்.

வீடும் பெருசு.. கலாட்டாவும் பெருசு..
அப்போது பேசும் மாப்பிள்ளை சார், நீங்க பொண்ணு வீடா மாப்பிளை வீடா என கேட்க பிரம்மாண்ட சிரிப்புடன் மீண்டும் பேச தொடங்கும் கமல் இங்கே வீடும் பெருசு.. கலாட்டாவும் பெருசு... எதிர்பாராததை எதிர்பாருங்கள் என முடிக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. மேலும் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.