For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஷிவானியோட ஓகே ஆயிடுச்சா.. சம்யுக்தாவின் கேள்வியால் வெட்கத்தில் வழிந்த பயில்வான்.. இனி ரொமான்ஸ்தான்!

  |

  சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டில் புதிய காதல் மலர்ந்திருப்பது உறுதியாகியுள்ளது.

  Bigg Boss Tamil Season 4 | Day 23 Highlights

  கடந்த பிக்பாஸ் சீசன்களில் காதலுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் இருந்தது. ஆனால் இம்முறை ஏகப்பட்ட இளசுகள் பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும் காதல் வருவது வடகிழக்கு பருவமழையை போல கொஞ்சம் தாமதமானது.

  இருந்த போதும் பாலாவையும் கேபியையும் கோர்த்துவிட்டு குளிர்காய பார்த்தார் பிக்பாஸ். சாதாரண சம்பவத்தை கன்னாபின்னாவென வெட்டி ஒட்டி யாரோ யாருக்குள் இங்கு யாரோ என பாட்டெல்லாம் போட்டார்.

  என் புருஷன நான் ரொம்ப லவ் பண்றேன் பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கதறி துடித்த கண்ணுக்குட்டி அனிதா!

  சிஸ்டராக பார்க்க முடியாது

  சிஸ்டராக பார்க்க முடியாது

  ஆனாலும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. பாலா மீது கேபிக்கு சாஃப்ட் கார்னர் இருந்த போதும், கேபியை சிஸ்டர் என்று கூறி புஸ்ஸாக்கிவிட்டார் பாலாஜி. இருப்பினும் ஷிவானியை தன்னால் சிஸ்டர் என்று சொல்ல முடியவில்லை என்றார்.

  கையைப்பிடித்து விளையாட்டு

  கையைப்பிடித்து விளையாட்டு

  கடந்த திங்கள் கிழமை நவராத்திரி செலிபிரேஷனின் போது இருவரும் தனியாக அமர்ந்து தங்களின் கொலு பொம்மைக்கு வண்ணம் தீட்டினர். அப்போது பாலாஜியை பாட சொல்லி ரசித்தார் ஷிவானி. நேற்றும் தங்க வேட்டை டாஸ்க்கின் போது பாலாஜியின் தங்கத்தை எடுத்த ஷிவானி, அவரது கையை பிடித்து விளையாடினார்.

  இரண்டாவது புரமோ

  இரண்டாவது புரமோ

  இந்நிலையில் இன்றைய முதல் புரமோவில், அர்ச்சனா மற்றும் ரியோ கார்னர் செய்ததால் கார்டன் ஏரியாவில் அமர்ந்து அழுதார் பாலாஜி. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

  ஷிவானியிடம் ஷேர்

  ஷிவானியிடம் ஷேர்

  அதில் ஷிவானியும் பாலாஜியும் பெட்டில் அமர்ந்து தனியாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ரொம்ப எமோஷனலா முடிஞ்சுது அந்த மேட்டர் என்கிறார் பாலாஜி. அதற்கு அழுதீங்கன்னு நினைக்கிறேன், இதெல்லாம் நீங்க சொல்லிதான் எனக்கு தெரியுது என்கிறார் ஷிவானி.

  ஆறுதல் படுத்திய ஷிவானி

  ஆறுதல் படுத்திய ஷிவானி

  அதற்கு நாம திமிரா பேசுறதால எல்லாத்துக்கும் திமிரா பேசுவோம்னு செட் பண்றாங்க என்கிறார் பாலாஜி. அப்போது பாலாஜியை ஆறுதல் படுத்தும் ஷிவானி, நீங்க நேர்மையா இருக்கீங்க, ஆனா விஷயத்தை சொல்ற விதம்தான் ஆட்டிட்யுடா இருக்கு அது உங்களோட ஸ்டைல் என கூறுகிறார்.

  ஓகே ஆயிடுச்சா?

  ஓகே ஆயிடுச்சா?

  இதனை தொடர்ந்து, சம்யுக்தாவிடம் செல்கிறார் பாலாஜி. அப்போது பாலாஜியிடம் ஷிவானி என்ன சொன்னா? ஓகே ஆயிடுச்சா என்று கேட்கிறார் சம்யுக்தா. அதற்கு என்ன ஓகே ஆயிடுச்சா? என்ன கேட்டாலும் தெளிவா கேளுங்க என வெட்கம் கலந்த சிரிப்புடன் சாமாளிக்கிறார் பாலாஜி.

  இன்ட்ரெஸ்டிங்

  இன்ட்ரெஸ்டிங்

  இதனை பார்க்கும் சுரேஷ் சக்கரவர்த்தி, இது நல்லாருக்கு என எங்கேயோ பார்த்து சொல்கிறார். இப்படியாக உள்ளது மூன்றாவது புரமோ. ஏற்கனவே கேபி மற்றும் சனம் ஷெட்டிக்கு பாலாஜி மீது ஒரு சாஃப்ட் கார்னர் உள்ளது. இந்நிலையில் பாலாஜி ஷிவானியிடம் விழுவது அவர்கள் எரிச்சலாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Biggboss second promo reveals some soft corner between Shivani and Balaji. Samyuktha also teasing Balaji with double meaning dialogue.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X