twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூப்பர் கவிஞரே... பிக்பாஸில் சொன்னபடி சொந்த ஊரில் நூலகம் கட்டும் சினேகன்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : பிரபல பாடலாசிரியர் சினேகன், விஜய் டி.வி-யில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலகம் முழுவதும் பிரபலமானார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசிவரை வந்த இவர் தான் டைட்டில் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இறுதிச்சுற்றில் மக்களின் வாக்குகளை அதிகமாகப் பெற்று ஆரவ் வெற்றி பெற்றார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் கூறியபடி தனது சொந்த ஊரில் நூலகம் ஒன்றை அமைக்கப் போகிறார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    போட்டியாளர்களின் ஆசைகள்

    போட்டியாளர்களின் ஆசைகள்

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் டைட்டிலை வென்றால் அந்தப் பணத்தை வைத்து என்ன செய்வார்கள் என அந்த நிகழ்ச்சியின்போது கேள்வி எழுப்பப்பட்டது. போட்டியாளர்களில் சிலர் மக்களுக்காக அந்தப் பணத்தைப் பயன்படுத்துவேன் எனக் கூறினார்கள்.

    நூலகம் கட்டுவேன்

    நூலகம் கட்டுவேன்

    பிக்பாஸ் டைட்டில் வென்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு என்ன செய்வீர்கள் என்று சினேகனிடம், கமல்ஹாசன் கேட்டதற்கு "என் சொந்த கிராமத்தில் நூலகம் கட்டுவேன்" என்று கூறினார்.

    மக்களைக் கவரவா

    மக்களைக் கவரவா

    சினேகன் நூலகம் கட்டவேண்டும் எனக் கூறியது மக்களைக் கவர்வதற்கான பப்ளிக் ஸ்டன்ட் என அப்போது பலரும் விமர்சித்தனர். சினேகன் வெற்றிபெறுவதற்காக நடிப்பதாக போட்டியாளர்கள் உட்பட பலரும் அப்போது பேசி வந்தனர்.

    நூலகம் அமைக்கிறார் சினேகன்

    நூலகம் அமைக்கிறார் சினேகன்

    இப்போது டைட்டில் வெல்லாவிட்டாலும் பிக்பாஸ் வீட்டில் தான் கொடுத்த வாக்குறுதிப்படி தனது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் புதுக்காரிபட்டியில் நூலகம் அமைக்கும் பணியைத் தொடங்கிவிட்டார் சினேகன்.

    மக்கள் நூலகம்

    மக்கள் நூலகம்

    சினேகனின் கனவு நூலகமான இது 'மக்கள் நூலகம்' எனும் பெயரில் உருவாக இருக்கிறது. இதற்கான பணிகள் பொதுமக்களின் உதவியோடு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த விஷயமாக ஏற்பாடுகளைச் செய்து வருகிறார் சினேகன்.

    ராகவா லாரன்ஸ் உதவி

    ராகவா லாரன்ஸ் உதவி

    சினேகன் கட்டவிருக்கும் இந்த நூலகத்திற்காக நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளார். மற்ற திரைப்பலங்களும் உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒரு கோடி செலவில்

    ஒரு கோடி செலவில்

    சினேகன் அமைக்கவிருக்கும் நூலகத்தில் 25 அறிஞர்களை கொண்டு நூல்கள் தேர்வு செய்யப்பட்டு நூலகத்தில் வைக்கப்படுகிறது. ஆராய்ச்சி நூல்கள், பழமையான நூல்கள் உள்பட 1 லட்சம் புத்தகங்களை கொண்டு சுமார் ஒரு கோடி செலவில் இந்த நூலகம் அமைய இருக்கிறது.

    அறிமுக விழா

    அறிமுக விழா

    இதற்கான அறிமுக விழா சென்னையில் நடந்தது. இசை அமைப்பாளர்கள் தாஜ்நூர், சத்யா, இயக்குனர் வேலுபிரபாகரன், நடிகர் வையாபுரி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    English summary
    Lyricist Snehan, who is famous all over the world after participating Biggboss program in Vijay TV. In the Biggboss show Snehan told he is going to set up a library in his home town. Now, the arrangements have been made in name of 'People's Library'. The work is to be launched in February next year with the help of the public.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X