»   »  ரசிகர்களின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த பிக்பாஸ் சுஜா!

ரசிகர்களின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த பிக்பாஸ் சுஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக்பாஸ் வீட்டில் பாதியில் நுழைந்தவர் நடிகை சுஜா வருணி. சுஜா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே அவரை யாருக்கும் பிடிக்கவில்லை.

இவர் நடிக்கிறார், நிஜமான சுஜாவாக இல்லை என்று பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறி வந்தனர். மற்ற போட்டியாளர்கள் நினைப்பது சுஜாவுக்குத் தெரிய வர அவரும் அனைவரிடமும் நான் நடிக்கவில்லை, இப்படித்தான் நான் என்று கூறினார்.

பிக்பாஸில் சிறப்பாக விளையாடிய அவர் இறுதிப்போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு எலிமினேட் செய்யப்பட்டார்.

இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பு :

இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பு :

பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் கொஞ்சம் தடுமாறிக்கொண்டு நடந்தார் சுஜா. ஆனால் அதே நேரத்தில் குத்து பாடலுக்கு செமையாக நடனம் ஆடுவது போலவும் காட்டினார்கள்.

ட்விட்டரில் ரசிகர்கள் :

ட்விட்டரில் ரசிகர்கள் :

இறுதி நிகழ்ச்சியைப் பார்த்த ரசிகர்கள் சுஜா வேண்டுமென்றே நடக்க முடியாதது போல நடிக்கிறார் எனக் குற்றம் சாட்டினர். பிக்பாஸ் வீட்டினுள் ஒரு டாஸ்க்கின்போது காலில் அடிபட்டதாக இதே போல நடித்தார் எனவும் கூறப்பட்டது.

சுஜா விளக்கம் :

இதுகுறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்திருக்கும் சுஜா, 'நான் நடனம் ஆடுவது முந்தைய நாளே எடுக்கப்பட்டது. நடனத்திற்குப் பிறகு எனது கால் வலி இன்னும் அதிகமாகிவிட்டது, அதனால் தான் அடுத்த நாள் நிகழ்ந்த இறுதி நிகழ்ச்சியில் என்னால் நடக்க முடியவில்லை என்று பதிவு செய்துள்ளார்.

எல்லாமே எடிட்டிங் :

எல்லாமே எடிட்டிங் :

முதல் நாள் ஆடியதையும், ஒரே நாளில் நடைபெற்ற நிகழ்ச்சி போல மாற்றியதுதான் எடிட்டிங் மேஜிக். ரசிகர்கள் எல்லாவற்றையும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். ஆதரவு தருவதற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Suja entered biggboss few days after started, she came to the grand finale of biggboss. Suja has given explanations to the fans on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil