வொர்ஸ்ட் கேப்டன்... லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் தண்டனை வாங்கிய மதுமிதா அன்ட் பாவனி.. இசைவாணிக்கு செக்!
சென்னை: பிக்பாஸ் வீட்டின் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் சரியா பர்ஃபார்ம் பண்ணாத பாவனிக்கும் மதுமிதாவுக்கும் தண்டனை கொடுத்தார் பிக்பாஸ்.
பிக்பஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக ஊர் விட்டு ஊர் வந்த டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஹவுஸ்மேட்ஸ் நகரத்தினர் என ஒரு குழுவாகவும் கிராமத்தினர் என மற்றொரு குழுவாகவும் என இரண்டு குழுக்களாக உள்ளனர்.

ஈடுபாடு குறைவாக
இதில் கிராமத்தினர் குழுவுக்கு அக்ஷரா ரெட்டி தலைவராகவும் நகரத்திற்கான தலைவராகவும் உள்ளனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஊர் விட்டு ஊர் வந்த டாஸ்க்கில் நாள் முழுவதும் முழு ஈடுபாட்டுடன் பங்கெடுத்துக் கொள்ளாத இரண்டு போட்டியாளர்களை யாருடனும் ஆலோசிக்காமல் தேர்வு செய்து கூறுமாறு குழுக்களின் தலைவர்களான அக்ஷரா மற்றும் நிரூப் ஆகியோருக்கு அறிவுறுத்தினார் பிக்பாஸ்.

இரவு முழுக்க தீ மூட்டி
இதனை கேட்ட நிரூப் தங்களின் குழுவில் பாவனி என கூறினார். அக்ஷரா ரெட்டி தங்களின் குழுவில் மதுமிதாவின் பெயரை கூறி அவர் கொஞ்சம் அப்செட்டாக இருந்ததால் தூரமாக இருந்ததாக கூறினார். இதனைக் கேட்ட பிக்பாஸ் மதுமிதா மற்றும் பாவனி இருவரையும் ஊர் விட்டு ஊர் வந்த டாஸ்க்கில் இருந்து விலக்கி வைப்பதாக கூறினார்.

இசைவாணிக்கு செக்
மேலும் இரண்டு பேரும் கார்டன் ஏரியாவில் இரவு முழுக்க தீ மூட்டி அணையாமல் பார்த்துக் கொள்ளுமாறு தண்டனை கொடுத்தார். அதோடு அவர்கள் அதை சரியாக செய்கிறார்களா என கண்காணிக்கும் படி நெருப்பு காயின் ஆளுமையை வைத்திருக்கும் இசைவாணிக்கும் செக் வைத்தார் பிக்பாஸ். இதனைக் கேட்ட ஹவுஸ்மேட்ஸ் செம ஹேப்பியாயினர்.

அதுக்கே நேரம் சரியா இருக்கு
இதனை சற்றும் எதிர்பாராத இசைவாணி நீங்க வேற மாரி பிக்பாஸ் என அதிருப்தியை வெளிப்படுத்தினார். பிக்பாஸ் பாவனிக்கும் மதுமிதாவுக்கும் தண்டனை கொடுத்ததை பார்த்த நெட்டிசகள் பாவனிக்கு மற்ற ஹவுஸ்மேட்டுகள் குறித்து ஊர் வம்பு பேசுவதற்கே நேரம் போதவில்லை, இதில் எப்படி டாஸ்க்கில் பர்ஃபார்ம் பண்ணுவார் என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











