பருவ மழையை பேரிடராய் மாற்றியது நாம்தான்.. சென்னை வெள்ளம்.. பிக்பாஸ் மேடையில் கமல் குற்றச்சாட்டு!
சென்னை: பருவமழையை பேரிடராய் மாற்றியது நாம் தான் என நடிகர் கமல்ஹாசன் பகீர் குற்றம்சாட்டியுள்ளார்.
வார இறுதி நாட்களில் நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் பார்வையாளர்கள் முன்னிலையில் ஹவுஸ்மேட்டுகளை சந்திப்பது வழக்கம்.
அதன்படி இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்டுகளை சந்திக்கும் முன்பாக பார்வையாளர்கள் முன்னிலையில் சென்னையில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளம் குறித்து பேசினார்.

வெயிலை பார்த்த சந்தோஷம்
அவர் பேசியதாவது, சில நாட்களுக்கு பிறகு இன்று வெயிலை பார்த்த சந்தோஷம் அனைவருக்கும் இருந்திருக்கும். நேற்று பல தாய்மார்களை சந்தித்தேன். சிறு வயதில் என் தாயார் என்னுடைய எல்லா கேள்விக்கும் பதில் கூறும் போது தலைமை ஆசிரியராக இருந்தபோது சாலையை கடக்க விழித்தார்கள் நான் பதட்டமாகிவிடுவேன்.

ஏழைகளை மட்டும் பாதிக்கவில்லை
நாம் ஆட்டோ பிடித்து போயிவிடலாமே, சாலையை கடக்க வேண்டாம் என்று கூறுவேன். அதுபோல நேற்று பல தாய்மார்களை பார்த்தேன். இந்த மழை ஏழைகளை மட்டுமே தாக்கிய மழை என்று சொல்லி விட முடியாது. நடுத்தர வர்க்க மக்கள், கார், பங்களா என வசதியாக இருக்கும் மக்களின் வீட்டுக்குள்ளும் மழை நீர் புகுந்து விட்டது.

பேரிடராய் மாற்றியது நாம்தான்
பருவ மழை குடி நீர் ஆதாரம். பருவமழையை பேரிடராய் மாற்றியது நாம்தான். வருடா வருடம் மழை வருகிறது. வருடா வருடம் இது நடக்கிறது. அந்த செய்தது, இந்த அரசு செய்தது என்று கூறுவதைவிட அதில் நமக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர வேண்டும். நதி கெட்டுப்போனதில் நம் கையில் இருந்த குப்பையும் கலந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.

3 நாட்களில் செய்யணும்
30 நாட்களில் செய்ய வேண்டிய வேலையை 3 நாட்களில் செய்தது பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, துப்புரவு பணியாளர்களும் ஓய்வெடுக்க வேண்டும். அவர்களுக்கும் நாம் ஓய்வு கொடுக்க வேண்டும். நாம் பத்தாவது மாடியில் இருக்கிறோம். நம் வீட்டுக்குள் தண்ணீர் வராது என்று நினைக்கக்கூடாது. குடிக்க தண்ணீர் கிடைக்காமல் போய்விடும் என எச்சரித்தார் கமல்.


Click it and Unblock the Notifications











