அபி ஒத்துக்க மாட்றான்.. நார்மலா இருன்னு சொன்னதும் அழுதான்... பிரியங்காவிடம் புட்டு புட்டு வைத்த பாவனி!

சென்னை: தான் நார்மலாக இருக்குமாறு கூறியதும் அபினய் அழுததாக பாவனி ரெட்டி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் அபினய்யும் பாவனி ரெட்டியும் நெருக்கமாக பழகி வருகின்றனர். அபினய் தன்னிடம் ஓவர் கேர் அன்ட் லவ்வை காட்டி வருவதாக பாவனி ஹவுஸ் மேட்டிடம் கூறிவந்தார்.

ஆனாலும் அபினய்யை விட்டு அவர் விலகவில்லை. அதே நேரத்தில் அவர்கள் ரிலேஷன்ஷிப் குறித்து பேசியவர்களிடமும், எங்களின் ரிலேஷன்ஷிப் குறித்து பேச உங்கள் யாருக்கும் உரிமை இல்லை என விளாசினார்.

கன்ஃபியூஸ் ஆன கமல்

கன்ஃபியூஸ் ஆன கமல்

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் குறும்படம் போட்டு, பாவனியின் டபுள் கேம் ஆட்டத்தை காட்டினார். கமலிடமும் அபினய்க்கு என் மீது ஃபீலிங்ஸ் இருப்பது போன்றே தெரிகிறது என்றார் பாவனி. அமீரிடம் அபினய்யை பிடிக்காது என்ற பாவனி, கமலிடம் பிடிக்கும் என்றார் இதனைக் கேட்டு கமலே கன்ஃபியூஸ் ஆனார்.

பிரியங்காவிடம் விளக்கம்

பிரியங்காவிடம் விளக்கம்

இந்நிலையில் இன்றைய எபிசோடின் தொடக்கத்திலேயே இந்த டாப்பிக் பத்தி இந்த வீட்டில் இனி யாரும் பேசக்கூடாது என அபினய், அமீர், அக்ஷரா என சக கோட்டியாளர்களிடம் கேட்டுக்கொண்டார. இதனை தொடர்ந்து கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த பாவனி, பிரியங்காவிடம் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்தார்.

என் மேல ஃபீலிங்ஸ்

என் மேல ஃபீலிங்ஸ்

அதாவது அபினய் என் மேல கேர் எடுக்குறது எனக்கு நல்லா தெரியுது. அவன் என்கிட்ட அந்த மாதிரிதான் பழகுறான். அவனுக்கு குடும்பம் இருக்கு அதனால நான் இதை பெரிது படுத்த வேண்டாம் என்று நினைத்தேன். ஆனா அவனுக்கு என் மேல ஃபீலிங்ஸ் இருக்கு என்பதை அவன் ஒத்துக்க மாட்றான்.

எல்லாருக்கும் டவுட்

எல்லாருக்கும் டவுட்

நான் பேசும் போதெல்லாம் நாம் நண்பர்கள்தான் நண்பர்கள்தான் என்று உறுதி படுத்திக்கொண்டே இருந்தேன். இதையெல்லாம் பார்த்துட்டுதான் அமீர் எல்லாருக்கும் அந்த டவுட் இருக்குன்னு சொல்றான். நான் அபினய்க்கிட்ட இதுக்காக கிளாரிஃபிகேஷன் கேட்டேன். இவ்ளோ கேர் என்கிட்ட காட்டாதேன்னு சொன்னேன்.

அபினய் அழுதான்

அபினய் அழுதான்

நார்மலா இருன்னும் சொன்னேன். உடனே போய் தனியா உட்காந்து அழுதான் என தனக்கும் அபினய்க்கும் இடையே நடந்ததை கூறினார். இதனைக்கேட்ட பிரியங்கா, ரெண்டு பேரும் உங்களுக்குள் ஹிண்ட் கொடுத்துக் கொண்டீர்களே தவிர விலகவில்லை என்று கூறினார் பிரியங்கா. அதற்கு பதில் கூறிய பாவனி, நான் விலகினேன், ஆனால் என்னால மூஞ்சில் அடித்தது போல் சொல்ல முடியவில்லை என்றார்.

என்ன பண்ண முடியும்?

என்ன பண்ண முடியும்?

மேலும் அபினய்யிடம் பேசும் போது, நீ சில விஷயம் பண்ற.. உன்கிட்ட பிரச்சனை இருக்கு, எல்லாருக்கும் அது தப்பாதான் தெரியும் என்று கூறினேன். அதுக்கு நான் என்ன பண்ண முடியும் என்று அபினய் கேட்டார் என பாவனி அபினய்க்கும் தனக்கும் நடந்த விஷயங்களை பிரியங்காவிடம் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X