Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த வார நாமினேஷனில் இருப்பவர்கள் இவர்கள்தான்... ஹவுஸ்மேட்டுகளை அலறவிடும் பிக்பாஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபினாலே ரேஸ் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து ஹவுஸ்மேட்டுகளையும் நாமினேட் செய்தார் பிக்பாஸ்.
நானி என் தம்பி ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியமைத்திருக்கிறார் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் உருகிய நடிகர்!
இதனை தொடர்ந்து பல்வேறு டாஸ்க்குகள் ஹவுஸ்மேட்டுகளுக்கு கொடுக்கப்பட்டன. இந்த டாஸ்க்குகளில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் இந்த வார எவிக்ஷன் புராசஸுக்கான நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.

இந்த வார நாமினேஷன்
அந்த வகையில் சிபி, நிரூப், தாமரை ஆகியோர் பிக்பாஸ் கொடுத்த வாய் டாஸ்க், மெண்ல் டாஸ்க் மற்றும் பிஸிக்கல் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் வெற்றி பெற்று எவிக்ஷனில் இருந்து தப்பித்தனர். இதனால் மற்ற அனைத்து போட்டியாளர்களும் எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸில் இடம்பெற்றுள்ளனர்.

கண்ணீர் விட்ட சஞ்சீவ்
இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ள கடைசி வாய்ப்பளித்தார் பிக்பாஸ். அதன்படி ராஜு வைல்ட் கார்டு போட்டியாளரான சஞ்சீவை காப்பாற்றினார். இதனால் எமோஷனலான சஞ்சீவ் ராஜுவை கட்டியணைத்து கண்ணீர் விட்டார்.

நாமினேஷனில் 6 பேர்
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் யாரெல்லாம் எவிக்ஷனுக்கான நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார்கள் என்று கூறுகிறார் பிக்பாஸ். அதன்படி அபினய், பிரியங்கா, பாவனி, வருண், அக்ஷரா மற்றும் ராஜு ஆகியோர் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளனர்.

வெளியேறப்போவது இவரா?
இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது அபினய்தான் என்று கூறி வருகின்றனர். மேலும் அன் அஃப்பிஷியல் வோட்டிங்கிலும் குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளார். இதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அபினய் வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

சிறப்பான வரவேற்பு
அதேநேரத்தில் அபினய் எவிக்ட் ஆகி வீட்டிற்கு சென்றால் அவரது மனைவி சிறப்பான வரவேற்பு கொடுப்பார் என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பகு குறித்த தகவல் நாளை மாலையே வெளியாகிவிடும்.