பிக்பாஸ் தாமரையின் கணவர் எங்கே வேலை பார்க்கிறார் தெரியுமா? லீக்கான போட்டோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தாமரை செல்வியின் கணவர் வேலை பார்க்கும் இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் தாமரை செல்வி. தெருக்கூத்து கலைஞரான தாமரை செல்வி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே தெரியாத பல விஷயங்களை கேட்டு கேட்டு தெரிந்து விளையாடி வருகிறார். தாமரைக்கு பல்வேறு வகையிலும் சக ஹவுஸ்மேட்ஸ் உதவி வருகின்றனர்.

கமலே ஆச்சரியப்படுகிறார்
தற்போது மற்ற போட்டியாளர்களை காட்டிலும் தெளிவாக விளையாடி வருகிறார். கமலே ஆச்சரியப்படும் வகையில் நாளுக்கு நாள் டெவலப் ஆகி வருகிறார் தாமரை செல்வி. இந்நிலையில் ஃபிரீஸ் டாஸ்க்கை முன்னிட்டு நேற்றைய எபிசோடில் தாமரை செல்வியின் மகனும் கணவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர்.

கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து
முதலில் வந்த மகனை வாரி அணைத்து முத்த மழை பொழிந்த தாமரை செல்வி, கட்டியணைத்து கண்ணீர் விட்டார். பின்னர் வீட்டுக்குள் வந்த தாமரை செல்வியின் கணவர் பார்த்த சாரதி தனது மனைவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். சக ஹவுஸ்மேட்டுகளிடமும் அழகாக பேசி பழகினார்.

பாயாசம் விஷயத்திலும் டோஸ்
மேலும் தாமரை செல்வி பாவனியை தனக்கு பிடிக்காது என்று கூறியதை கேட்டு கடுப்பான பார்த்தசாரதி அந்த வார்த்தையை இனி சொல்லக்கூடாது என உத்தரவு போட்டார். மேலும் பாயாசம் விஷயத்திலும் தாமரைக்கு டோஸ் விட்டார் பார்த்தசாரதி.

அடிக்கடி கறி சாப்பிடுறேன்
இதேபோல் சக ஹவுமேட்டுகளிடம் கோபப்படக்கூடாது என்று கூறிய பார்த்த சாரதி, அவர்களால்தான் தாமரை செல்வி இத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததாக கூறினார்.
உறவினர்கள் குறித்து கணவரிடம் விசாரித்த தாமரை, தான் மட்டும் அடிக்கடி இங்கு கறி சாப்பிடுவதாகவும், நீங்கள் எல்லாம் சாப்பிடுகிறீர்களா என்றும் ஏக்கத்துடன் கேட்டார்.

தாமரையின் கணவர் வேலை
அதற்கு பதில் கூறிய தாமரையின் கணவர் பார்த்த சாரதி நாங்களும் சாப்பிடுகிறோம். நீ எதைப்பற்றியும் கவலைப்படாமல் விளையாடு என்றார். கணவன் மனைவி பேசிக் கொண்டதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ந்து போயினர். இந்நிலையில் தாமரை செல்வியின் கணவர் வேலை பார்க்கும் இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

துணிக்கடையில் விற்பனை..
அதன்படி துணிக்கடை ஒன்றில் சேல்ஸ் பிரிவில் வேலை பார்த்து வருகிறார் பார்த்த சாரதி. இதனை பார்த்த நெட்டிசன்கள் தாமரை செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் இனி மாறும் என தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











