Don't Miss!
- News
"ஆபரேஷன் 111".. எடப்பாடி இறக்கிய மெகா டீம்.. நடப்பது நடக்கட்டும்.. பறந்து போன ஆர்டர்.. ஆஹா செம மோதல்
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மீண்டும் ஜெயிலுக்கு போன நிரூப் அன்ட் வைல்டு கார்ட் என்ட்ரி.. கேப்டன் டாஸ்க்கிற்கு தேர்வான 3 பேர்!
சென்னை: லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் வொர்ஸ்ட் பர்ஃபாமராக தேர்வு செய்யப்பட்ட நிரூப் மற்றும் அமீர் பிக்பாஸ் வீட்டின் பாதாள சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் சிபி ஸ்ட்ரிக்ட் வார்டனாக இருந்தார்.
கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான்
ராஜு தமிழ் ஆசிரியராக இருந்தார். இதே போல் அமீர் மற்றும் அபிஷேக் ஆகியோரும் ஆசிரியர்களாக இருந்தனர்.

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் பரிசுகள்
மற்ற அனைவரும் மாணவ மாணவிகளாக இருந்தனர். இந்த டாஸ்க்கில் பல்வேறு சண்டை சச்சரவுகளும் இருந்தது. நேற்றுடன் இந்த டாஸ்க் முடிந்த நிலையில் ஸ்போர்ட்ஸ், டிசிப்பிளின், படிப்பு, டான்ஸ் என பெஸ்ட் பர்ஃபார்மராக இருந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

போட்டியாளர்கள்..
இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் பெஸ்ட் பர்ஃபார்மர் என மூன்று பேரை தேர்வு செய்யுமாறு கூறினார் பிக்பாஸ். இதனை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்கள் யார் என ஒவ்வொருவரும் தலா மூன்று போட்டியாளர்களை கூறினர்.

கேப்டன் டாஸ்க்கிற்கு தேர்வு
இதைத்தொடர்ந்து பெஸ்ட் பர்ஃபாமர்களாக அபிஷேக், இமான் அண்ணாச்சி மற்றும் சிபி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மூன்று போட்டியாளர்களும் அடுத்த வார கேப்டன் டாஸ்க்கிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

வழக்கம் போல் வாக்குவாதம்
இதனை தொடர்ந்து லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் சுவாரசியம் குறைவாக இருந்த இரண்டு போட்டியாளர்களை தேர்வு செய்யுமாறு கூறினார் பிக்பாஸ். இதில் வழக்கம் போல சிபிக்கும் அக்ஷராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மீண்டூம் பாதாள சிறையில்
வொர்ஸ்ட் பர்ஃபாமராக நிரூப் மற்றும் அமீர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் இருவரும் இருந்த இடமே தெரியவில்லை என இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இருவரும் பிக்பாஸ் வீட்டின் பாதாள சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

மூன்று நாட்களிலேயே ஜெயில்
ஏற்கனவே காயின் டாஸ்க்கின் போது நிரூப் ஜெயிலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் ஜெயிலுக்கு சென்றார் நிரூப். இதேபோல் அமீர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து மூன்று நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டின் ஜெயிலுக்குள் சென்றார்.