கன்டென்ட் கொடுப்பவரையே காலி பண்ணிய மக்கள்.. லீக்கான ஓட்டு எண்ணிக்கை.. இன்று வெளியேறப்போவது இவரா?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளவர்கள் பெற்ற வாக்கு விவரங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Bigg Boss 5 Tamil Second Elimination | Chinna Ponnu | Weekend Episode

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் வாரத்தில் போட்டியாளர்கள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாமினேஷன் நடைபெறவில்லை.

அதே நேரத்தில் போட்டியாளர்களில் ஒருவரான நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறினார். அவரது வெளியேற்றத்திற்கான காரணம் என்ன என்று அறிவிக்கப்படவில்லை.

முதல் நாமினேஷன்

முதல் நாமினேஷன்

பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் நடந்த அடிதடி சண்டையால் அவர் வெளியேறினார் என்றும் உடல் நலக்குறைவு காரணமாக நமீதா வெளியேறினார் என்றும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது வாரம் நாமினேஷன் நடைபெற்றது. இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 15 போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பிடித்தனர்.

இந்த வார நாமினேஷன்

இந்த வார நாமினேஷன்

அவர்களில் முதல் நபராக மலேசிய மாடலான நாடியா சங் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை பிக்பாஸ் வீட்டின் இரண்டாவது நாமினேஷன் நடைபெற்றது. இதில் மொத்தம் 9 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர்.

மரண பயத்தை காட்டிய பிக்பாஸ்

மரண பயத்தை காட்டிய பிக்பாஸ்

அதன்படி அபிஷேக், அக்ஷரா, பாவனி ரெட்டி, தாமரை செல்வி, சின்னப்பொண்ணு, அபினய், பிரியங்கா, இசைவாணி, ஐக்கி பெர்ரி ஆகியோர் ஆவர். கடந்த வாரமே சின்னப்பொண்ணு மற்றும் அபிஷேக் ஆகியோர் இறுதி வரை சென்றனர். அதிலும் குறிப்பாக அபிஷேக் ஜஸ்ட்டில் மிஸ்ஸானார். கடைசி வரை அவரை இழுத்து மரண பயத்தை காட்டிட்ட பரமா என்று கூறும் அளவுக்கு வைத்து விட்டனர்.

அதிக வாக்குகள் பெற்றவர்கள்

அதிக வாக்குகள் பெற்றவர்கள்

இந்த வார நாமினேஷனிலும் அபிஷேக் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்கள் பெற்றுள்ள வாக்கு விவரங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்து உள்ளது. பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்ஷரா, தாமரை ஆகியோர் அதிக வாக்குகளை பெற்று டாப்பில் உள்ளனர்.

இந்த வாரமும் கடைசி இடம்

இந்த வாரமும் கடைசி இடம்

அவர்களுக்கு அடுத்தப்படியாக இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபினய் மற்றும் சின்னப்பொண்ணு கணிசமான வாக்குகளை பெற்றுள்ளனர். இதில் கடைசி இடத்தில் அபிஷேக் ராஜா உள்ளார். அபிஷேக் ராஜா ஆரம்பம் முதலே பார்வையாளர்களை எரிச்சலாக்கி வருகிறார். ஹவுஸ் மேட்டுகளை இன்ஃபுளுயன்ஸ் செய்வது, மூத்த போட்டியாளர்களை அவமதிப்பது என நாளுக்கு நாள் அவர் மீதான க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது.

கன்டென்ட் கிவ்வர்

கன்டென்ட் கிவ்வர்

முதலில் அபிஷேக் ராஜாவை வெளியேற்றுங்கள் என கொடி பிடிக்காத குறையாக பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் அவர் தான் கன்டென்ட் கொடுக்கிறார். அவர் இல்லாட்டி நிகழ்ச்சி சுவாரசியமே இல்லாமல் போய்விடும் என்றும் இன்னும் கொஞ்ச நாள் அவரை வச்சு செய்யலாம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எவிக்ஷன் அறிவிப்பு வெளியாகும்

எவிக்ஷன் அறிவிப்பு வெளியாகும்

இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் பிக்பாஸ் போட்டியாளர்களை நடிகர் கமல்ஹாசன் இன்று நேரடியாக சந்திப்பார். அப்போது இந்த வாரம் நடந்த சம்பவங்கள் குறித்து விவாதிப்பார். மேலும் யார் இந்த வாரம் எவிக்ட் ஆகிறார் என்றும் அறிவித்து விடுவார் கமல். நாளைக்கான எபிசோடும் இன்றே காட்சியாக்கப்பட்டுவிடும் என்பதால் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பது குறித்த தகவல் இன்று இரவே தெரிந்து விடும்.

அவர் வெளியேற வாய்ப்பு இல்லை

அவர் வெளியேற வாய்ப்பு இல்லை

பெரும்பாலும் இந்த வாரம் சின்னப்பொண்ணு அல்லது அபினய்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. அபிஷேக் கன்டென்ட் கிவ்வராக உள்ளதால் அவரை பிக்பாஸ் இன்னும் வச்சு செய்வார் என்றும் அதனால் அவர் வெளியேற வாய்ப்பு இல்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X