அப்போ... இந்த வாரம் வெளியே போறது இவர்தானா? நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பிடித்த 7 பேர்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வார எவிக்ஷன் புராசஸிற்கு 7 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை நாமினேஷன் புராசஸ் நடைபெற்று வருகிறது. இதில் ஹவுஸ்மேட்டுகளால் நாமினேட் செய்யப்படும் சக ஹவுஸ்மேட்டுகள் எவிக்ஷன் புராசஸில் இடம் பெறுவார்கள்.
அவர்களில் குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்தை பிடிக்கும் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.

முதல் முறையகா 3 பேர்
அந்த வகையில் இதுவரை நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு மற்றும் ஸ்ருதி என 4 பேர் எவிக்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வார நாமினேஷன் புராசஸ் திங்கள் கிழமையான இன்று நடைபெற்றது. இதில் முதல் முறையாக மூன்று பேரை நாமினேட் செய்யுமாறு கூறினார் பிக்பாஸ்.

7 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில்
இதுவரை 2 பேரை மட்டுமே ஒரு போட்டியாளர் நாமினேட் செய்து வந்த நிலையில் இந்த வாரம் 3 பேரை ஒவ்வொரு போட்டியாளரும் நாமினேட் செய்தனர். அவர்களில் அதிகப் பேரால் ராஜு நாமினேட் செய்யப்பட்டார். மேலும் அபினய், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, சிபி, பாவனி, மதுமிதா ஆகியோரும் இந்த வார எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர்.

மதில் மேல் பூனையாக
கடந்த வாரமே அபினய், ஸ்ருதியுடன் போட்டி போட்டு யார் வெளியே செல்வது என கடைசி வரை மதில் மேல் பூனையாக இருந்தார். ஆனால் கடைசியில் ஸ்ருதியை வெளியேற்றி அபினய் காப்பாற்றப்பட்டார். இதுவரை அபினய் தன்னை நிரூபிக்கவில்லை என்ற பேச்சு உள்ளது.

கேப்டனான பிறகே எவிக்ஷன்
ஆனாலும் கமலின் சிபாரிசால் வந்தவர் என்பதால் அவரை வெளியேற்றாமல் நன்றாக விளையாடி வந்த ஸ்ருதியை வெளியே அனுப்பினார்கள் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த வாரம் கேப்டன் டாஸ்க்கையும் அவர் இழந்துவிட்டதால் ஒருமுறை கேப்டனான பிறகே அவர் வெளியேற்றப்படுவார் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த இருவரில் ஒருவர்
இதனால் இந்த வாரம் எவிக்ஷன் புராசஸில் இமான் அண்ணாச்சி மற்றும் மதுமிதாவுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரில் யாரோ ஒருவர் நிச்சயம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும் யார் வெளியேறுவார் என்பது இறுதி நாளில்தான் தெரியும்.


Click it and Unblock the Notifications











