இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவரா? கணிக்க தொடங்கிய நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் யார் என்பது குறித்து நெட்டிசன்கள் இப்போதே கணிக்க தொடங்கி விட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது வழக்கம். இதில் நாமினேட் ஆகும் போட்டியாளர்கள் மக்கள் அளிக்கும் வாக்கு அடிப்படையில், யார் குறைந்த வாக்குகளை பெறுகிறார்களோ அவர்களே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
அந்த வகையில் இதுவரை, நாடியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபினய் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நாமினேஷனில் 6 பேர்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றது. இதில் சிபி, பாவனி, அக்ஷரா, பிரியங்கா, நிரூப், வருண் ஆகிய 6 பேர் இடம்பெற்றுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போகிறார் என்று தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வருண் வெளியேறலாம்?
அதன்படி கடந்த வாரம் கடைசி வரை அபினய்க்கு போட்டியாக வந்த வருண் இந்த வாரம் வெளியேறலாம் என கூறி வருகின்றனர். வருண் டாஸ்க்குகளில் ஆர்வத்தோடு விளையாடி வருகிறார். இருப்பினும் சில போட்டியாளர்களுடன் அவருக்கு இதுவரையும் ஒத்து போகவில்லை. இதனால் சில ஹவுஸ் மேட்ஸ் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். இதனால் வருண் இந்த வாரம் வெளியேறலாம் என்கின்றனர்.

அமீருடன் நெருக்கம்
அதேநேரத்தில் இந்த வாரம் பாவனி வெளியேற வாய்ப்புள்ளதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அபினய்யுடன் நெருக்கமாக பழகி வந்த பாவனி, அமீர் வந்த பிறகு அவருடன் நெருக்கம் காட்டினார். தனக்கு தேவையான உதவிகளை செய்ய அபினய்யை பயன்படுத்திக்கொண்ட பாவனி, பின்னர் அவரை தனக்கு பிடிக்கவே பிடிக்காது என்றார்.

முத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத பாவனி
அதேநேரத்தில் தன்னை காதலிப்பதாக ஜொள்ளுவிட்டு வரும் அமீரிடமும் ஸ்ட்ரிக்ட்டாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார். அமீர் முத்தம் கொடுத்ததற்கு கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் சக போட்டியாளர்களுடன் அதுகுறித்து ஷேர் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் பாவனி.

நிரூப்புக்கும் பிரியங்காவுக்கும்..
இதனால் இந்த வாரம் பாவனி வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். இதேபோல் நிரூப் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் நெட்டிசன்கள். நிரூப்புக்கும் பிரியங்காவுக்கும் பிக்பாஸ் வீட்டுக்குள் கடந்த சில நாட்களாக ஏழாம் பொருத்தமாக உள்ளது.

நிரூப்பை வெளியேற்றலாம்
பிரியங்காவுக்காக வேண்டி அபிஷேக்கை வெளியேற்றியது போல் நிரூப்பை வெளியேற்றலாம் என்றும் கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். இருப்பினும் டபுள் கேம் ஆடி வரும் பாவனியை இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றே பெரும்பாலான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Recommended Video

என்ன டிவிஸ்ட் வரப்போகிறதோ..
வாக்களிக்கும் ரசிகர்களே பாவனி வெளியேற வேண்டும் என கூறி வருவதால் அவர் வெளியேறவே அதிக வாய்ப்பு இருக்கும் என தெரிகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதே பிக்பாஸின் ஸ்பெஷல் என்பதால் எவிக்ஷனில் என்ன டிவிஸ்ட் வேண்டுமானாலும் வரலாம். ஆகையால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போகிறார்கள் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











