»   »  'என்னது மறுபடியுமா..?' - கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை பங்கமாக கலாய்த்த பிக்பாஸ்!

'என்னது மறுபடியுமா..?' - கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை பங்கமாக கலாய்த்த பிக்பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விஜய் டி.வி-யில் உலகெங்கும் இருக்கும் திறமையாளர்கள் கலந்துகொள்ளும் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் வரும் அக்டோபர் 1 முதல் தொடங்கவிருக்கிறது.

இதுவரை நடைபெற்ற ஆறு சீசன்களின் மூலம் பல திறமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு அடுத்தடுத்த தளங்களுக்குச் சென்றிருக்கிறார்கள்.

இந்த சீசன் நிகழ்ச்சியின் நடுவர்களாக ஈரோடு மகேஷ், ஆர்த்தி, பிரியங்கா, தாடி பாலாஜி, சேது ஆகிய ஐந்துபேரும் செயல்பட இருக்கிறார்கள்.

பிக்பாஸ் ஸ்டைல் :

கலக்கப்போவது யாரு சீசன் 7 நிகழ்ச்சிக்கான ப்ரொமோ இன்று வெளியானது. பிக்பாஸ் வீட்டுக்குள் அமைந்திருக்கும் கன்ஃபெஷன் ருமில் இந்த நடுவர்கள் அனைவரும் இருப்பது போலவும், பிக்பாஸ் இவர்களுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் தருவது போலவும் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.

மொக்கை ஜோக்ஸ் :

மொக்கை ஜோக்ஸ் :

நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் நல்ல ஜோக் சொல்கிறார்கள். நடுவர்களான நீங்கள் தரமற்ற ஜோக் சொல்லி வெறுப்பேற்றுகிறீர்கள் எனச் சொல்லியிருக்கிறார் KPY பிக்பாஸ். அதுபோக, நிகழ்ச்சி ஞாயிறுதோறும் பிக்பாஸ் ஒளிபரப்பு நேரமான 8.30 க்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

அதுலயாச்சும் காமெடி இருக்குமா? :

அதுலயாச்சும் காமெடி இருக்குமா? :

இந்த ப்ரொமோவே இவ்வளவு மொக்கையா இருக்கே... இந்த நிகழ்ச்சியிலாவது சிரிப்பு வர்ற மாதிரி காமெடி பண்ணுவீங்களா என ரசிகர்கள் பலர் கலாய்த்திருக்கின்றனர்.

பிக்பாஸையும் காமெடி பீஸ் ஆக்கிட்டீங்க :

பிக்பாஸையும் காமெடி பீஸ் ஆக்கிட்டீங்க :

யானை தன் தலையில் தானே மண்ணை வாறிப் போட்டுக்குற மாதிரி, பிக்பாஸையும் காமெடி பீஸாக்கி, அடுத்த சீசனை ஊத்தி மூட வெச்சுடுவீங்க போல என ரசிகர்கள் சிலர் கமென்ட் செய்துள்ளனர்.

English summary
The seventh season of 'kalakka povadhu yaru' will start on October 1. Erode Mahesh, Aarthi, Priyanka, Thadi Balaji, Sethu are the five judges. KPY Biggboss has said that the jury is unlikely to say poor jokes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil