Don't Miss!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Finance
இந்தியாவை விட இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசத்தில் பெட்ரோல் விலை குறைவு.. ஆய்வறிக்கை வெளியீடு!
- News
கனமழை வெளுத்து வாங்க போகுது! பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! கவனமாக இருங்க மக்களே..!
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட பிகில் நடிகை.. இணையத்தில் கசிந்த திருமண புகைப்படங்கள்!
சென்னை: 'பிகில்' நடிகை ரெபா மோனிகா தனது நீண்ட நாள் காதலரை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் செய்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்தநாள் அன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது இருவரும் மீடியா மற்றும் சினிமா பிரபலங்களுக்கு அறிவிக்காமல் தங்கள் திருமணத்தை ரகசியமாக எளிமையான முறையில் செய்துள்ளனர்.
நடிகை ரெபா மோனிகா ஜான் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.
பொங்கலுக்கு
பட்டையை
கிளப்ப
தயாராகும்
சின்ன
பட்ஜெட்
படங்கள்

பிகில் நடிகை
தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய நடிகை ரெபா மோனிகா ஜான். தொடர்ந்து ஏகப்பட்ட படங்களிலும் வீடியோ ஆல்பம் பாடல்களிலும் நடித்து பட்டையை கிளப்பி வந்தார். இந்நிலையில், அவருக்கும் அவரது காதலருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

மலையாள நடிகை
2016ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜாக்கப்பின்டே ஸ்வர்கராஜ்ஜியம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். கடந்த 2018ம் ஆண்டு நடிகர் ஜெய்யுடன் ஜருகண்டி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே படத்திலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ஃபாரன்ஸிக் படத்திலும் இவர் தான் ஹீரோயின்.

பிறந்தநாளில் புரபோஸல்
1994ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி பெங்களூருவில் பிறந்த நடிகை ரெபா மோனிகா ஜான் தனது 27வது பிறந்தநாளை கடந்த ஆண்டு துபாயில் கோலாகலமாக கொண்டாடினார். அவரது பிறந்தநாளன்றே நீண்ட நாட்களாக அவருடன் நட்பாக பழகி வந்த ஜோமோன் என்பவர் சர்ப்ரைஸாக செய்த புரபோஸல் ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்தது.

காதலுக்கு க்ரீன் சிக்னல்
தன்னுடன் நீண்ட நாட்களாக நட்பாக பழகி வந்த ஜோமோன் துபாயில் ஸ்பெஷலாக பர்த்டே டின்னரை ஏற்பாடு செய்து தனது காதலை சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா என மோதிரத்தை காட்ட ரெபாவும் உடனே ஓகே சொல்லிவிட்டார். இந்நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

காதலரை மணந்தார் ரெபா
அஸ்வின் குமாரின் குட்டிப் பட்டாசு ஆல்பம் பாடலில் ஆடி பாடி அசத்திய ரெபா மோனிகா ஜான் தனது நீண்ட நாள் காதலரான ஜோமோனை கடந்த ஜனவரி 9ம் தேதி பெங்களூருவில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். லீலா பேலஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

படு சீக்ரெட்
பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் தான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. கொரோனா பரவல் காரணமாக படு சீக்ரெட்டாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த பிறகும் கூட தனது சோஷியல் மீடியா பக்கங்களில் அவர் இன்னமும் திருமண புகைப்படங்களை வெளியிடவில்லை. திருமணத்தில் கலந்து கொண்ட அவரது நண்பர்கள் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடிகை ரெபா மோனிகா ஜானை வாழ்த்தி வருகின்றனர்.