»   »  ரூ. 1 கோடி கார் விபத்துக்குள்ளானதில் மாடல் அழகி, 2 அண்ணன்கள் உடல் கருகி பலி

ரூ. 1 கோடி கார் விபத்துக்குள்ளானதில் மாடல் அழகி, 2 அண்ணன்கள் உடல் கருகி பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிட்னி: ரூ. 1 கோடி மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் 22 வயது மாடல் அழகி அவரது சகோதரர்கள் இருவர் உடல் கருகி பலியாகினர்.

ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தவர் ப்ரீ கெல்லர்(22). பிகினி மாடல் அழகி. அவர் ரூ. 1 கோடி மதிப்புள்ள நிஸான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார். காரை வாங்கிய 7வது நாள் இரவு அவர் தனது சகோதரர்கள் ஸ்டீவ், ஜெஃப் ஆகியோருடன் வெளியே சென்றுள்ளார்.

கார் வேகமாக வந்தபோது விபத்துக்குள்ளானது.

விபத்து

விபத்து

இரவு 3 மணி அளவில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. தலைகீழாக விழுந்த காரில் இருந்த ப்ரீ உள்ளிட்ட அனைவரும் படுகாயம் அடைந்தனர்.

பலி

பலி

காரில் இருந்த ஜோசப் பகாலா(39) என்பவரை போலீசார் உயிருடன் மீட்டனர். பகாலாவை வெளியே எடுத்தவுடன் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் ப்ரீ மற்றும் அவரின் சகோதரர்கள் உடல் கருகி பலியாகினர்.

காதலர்

காதலர்

ப்ரீ கெல்லரின் மரண செய்தி குறித்து அறிந்த அவரது பெற்றோரும், காதலரும் அதிர்ச்சி அடைந்தனர். என் மகள் வருவாள் வருவாள் என்று வாசல் பக்கம் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் என ப்ரீயின் மாற்றான் தந்தை பீட்டர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

வீடியோ

வீடியோ

ப்ரீ கெல்லரின் கார் தீப்பிடித்து எரிந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சிலர் ப்ரீ மற்றும் சகோதரர்கள் காரில் வேகமாக சென்றதை விமர்சித்து வருகிறார்கள்.

English summary
Bikini model Bree Keller and her two brothers were burned to death after their sports car crashed and burst into flames.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil