»   »  பில்லா-2: ரஜினி ஸ்பெஷல் கெஸ்டட்!

பில்லா-2: ரஜினி ஸ்பெஷல் கெஸ்டட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிக்கவுள்ள பில்லா-2007 படத்தின் பெயர் பில்லா-2 என மாற்றப்பட்டுள்ளது. ஏப்ரல் 13ம் தேதி நடைபெறவுள்ள பட பூஜையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

ரஜினி, ஸ்ரீபிரியாவின் அட்டகாச நடிப்பில் உருவான இந்தி ரீமேக் படம் பில்லா. இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி வசூல் சாதனை படைத்த டான் படம்தான் தமிழில் பில்லா என்ற பெயரில் ரீமேக் ஆனது.

நீண்ட காலத்திற்குப் பிறகு சமீபத்தில் டான் படத்தை ரீமேக் செய்து ஷாருக்கான் நடிப்பில் அது வெளியானது. இப்போது பில்லாவையும் ரீமேக் செய்கின்றனர்.

அஜீத் நடிப்பில் உருவாகும் இந்த ரீமேக்குக்கு பில்லா 2 என்று பெயர் வைத்துள்ளனர். ஏப்ரல் 13ம் தேதி அஜீத்தின் பில்லாவுக்கு பூஜை போடுகிறார்கள். ரஜினிதான் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிளாப் அடிக்கவுள்ளார். ஏவி.எம்.ஸ்டுடியோவில் பூஜை நடைபெறுகிறது.

அஜீத் படத்துக்கு ரஜினி கிளாப் அடிப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு பரமசிவன் படத்துக்கும் அவர் தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

படத்தின் பெயரை பில்லா-2 என சென்டிமென்ட் கருதி மாற்றி விட்டாராம் இயக்குநர் விஷ்ணுவர்த்தன். படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் நயனதாரா, இன்னொருவர் நமீதா. இவர் பிரவீணா கேரக்டரில் நடிக்கிறார். ஸ்ரீபிரியா கேரக்டரில் நயனதாரா நடிக்கவுள்ளார்.

விஷ்ணுவர்த்தனின் இசை தோஸ்த் யுவன் ஷங்கர்ராஜாதான் இசையமைக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு யுவனும், விஷ்ணுவும் மலேசியாவுக்குப் போய் சில பாடல்களுக்குரிய ட்யூன்களை முடித்து விட்டு வந்துள்ளனராம்.

இனி அஜீத் நேமும் பில்லா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil