»   »  நயனதாரா, அஜீத், நமீதா

நயனதாரா, அஜீத், நமீதா

Subscribe to Oneindia Tamil

அஜீத், நயனதாரா, நமீதா நடிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவாகவுள்ள பில்லா-2 படத்தின் பூஜை வருகிற 13ம் தேதி சென்னை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூஜையில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி படத்தைத் தொடங்கி வைக்கிறார்.

ரஜினி, ஸ்ரீபிரியாவின் கலக்கல் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட பில்லா, பில்லா-2 என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் அஜீத், ரஜினி வேடத்திலும், நயனதாரா ஸ்ரீ பிரியா வேடத்திலும், நமீதா, பிரவீணா வேடத்திலும் நடிக்கிறார்கள். பாலாஜி நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் பிரபு நடிக்கவுள்ளார்.

பில்லாவில் மேஜர் சுந்தரராஜன் நடித்த போலி சிபிஐ அதிகாரி வேடத்தில், பிரகாஷ் ராஜ் நடிக்கவுள்ளார். ஆனந்தா பிக்சர்ஸ் சார்பில் எல்.சுரேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தின் பூஜை ஏவி.எம். ஸ்டுடியோவின் 3வது தளத்தில் ஏப்ரல் 13ம் தேதி நடைபெறுகிறது. ஒரிஜினில் பில்லா ரஜினி, ஸ்ரீபிரியா ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். மனோரமாவும் பூஜையில் பங்கேற்கவுள்ளார்.

ரஜினி குத்துவிளக்கேற்றி படப்பிடிப்பைதத் தொடங்கி வைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிப்பாளர் கே.பாலாஜி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கேஆர்ஜி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

வெத்தலையைப் போட்டாச்சு, இனி அஜீத் சக்தி ஏறிடும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil