»   »  திருச்சிக்கு வரும் "பின்லேடன்"... என்னென்ன பாடுபடப் போறாரோ..!

திருச்சிக்கு வரும் "பின்லேடன்"... என்னென்ன பாடுபடப் போறாரோ..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பின்லேடன் என்ற பெயரில் புதிய தமிழ்ப்படம் ஒன்று தயாராகிறது. அரவிந்த் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் சிவா நாயகனாக நடிக்கிறார்.

விதவிதமாக யாரும் எதிர்பார்க்காதபடி தலைப்பு வைப்பது தான் தற்போதைய தமிழ் சினிமாவின் டிரண்ட். அந்தவகையில், புதிய தமிழ்ப்படம் ஒன்றிற்கு பின்லேடன் எனப் பேர் வைத்து மிரட்டியிருக்கிறார்கள்.

ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக இப்படம் உருவாகிறதாம்.

திருச்சியில் பின்லேடன்...

திருச்சியில் பின்லேடன்...

தலைப்பிற்கும் படத்திற்கும் சம்பந்தம் இருக்காது என நினைக்கவேண்டாம் என்கிறார் இயக்குநர். அதாவது பின்லேடன் திருச்சிக்கு வந்து என்னென்ன அவதியெல்லாம் படுகிறார் என்பது தான் கதைக்களமாம்.

2 கதைகள்...

2 கதைகள்...

அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் இரண்டு கதைகள் இருக்கிறதாம். அதில் ஒன்று பின்லேடனின் திருச்சி வருகை. மற்றொன்று சிவாவைப் பற்றியது. ஆனால், இரண்டு கதைக்கும் சம்மந்தம் இல்லாமல் படம் இருக்குமாம்.

வித்தியாசமான கெட்டப்...

வித்தியாசமான கெட்டப்...

இந்தப் படத்தில் இதுவரை பார்க்காத வித்தியாசமான கெட்டப்பில் வந்து சிவா அசத்த இருக்கிறாராம். பின்லேடன் வேடத்தில் நடிக்கப் போகும், நடிகரை இன்னும் தேர்வு செய்யவில்லை என இயக்குநர் அரவிந்த் கூறியுள்ளார்.

டார்க் காமெடி...

டார்க் காமெடி...

டார்க் காமெடி எனப்படும் கொஞ்சம் வன்முறையும் , அரசியலும் கலந்த காமெடிப் படமாக உருவாகி வரும் இப்படத்தில் மாயா நாயகியாக நடிக்கிறார். அச்சு ராஜாமணி இசையமைக்கிறார்.

English summary
Shiva's next will be an action comedy. And the interesting bit is that the film will be a dark comedy. Titled Bin Laden, the film will be directed by newcomer Aravind.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil