»   »  நடிகை பாவனாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் பினராயி விஜயன்!

நடிகை பாவனாவுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் பினராயி விஜயன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கடத்தல் மற்றும் பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல நடிகை பாவனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

சில தினங்களுக்கு முன்பு 7 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டு, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார் பாவனா. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் சம்பவத்தைக் கண்டித்து வருகின்றனர்.

Binarayi Vijayan calls up actress and assured justice

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கேரள முதல்வருக்கு நேற்று கடிதம் எழுதியது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.

இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று பாவனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நடந்து சம்பவம் குறித்து விசாரித்தறிந்த அவர், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

கேரளாவின் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனும் பாவனாவைத் தொடர்பு கொண்டு விசாரித்து, ஆறுதல் கூறினார்.

English summary
The Kerala Chief Minister Binarayi Vijayan has contacted actress Bhavana over phone and assured justice to her.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil