»   »  பிக் பாஸால் ஓவியாவுக்கு வந்த அதே பிரச்சனை பிந்து மாதவிக்கும்

பிக் பாஸால் ஓவியாவுக்கு வந்த அதே பிரச்சனை பிந்து மாதவிக்கும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால் பட வாய்ப்பை இழந்துள்ளார் பிந்து மாதவி.

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய சில நாட்கள் கழித்து வந்தவர் நடிகை பிந்து மாதவி. பிக் பாஸ் வீட்டிற்கு வந்த வேகத்தில் காயத்ரியிடம் அதிரடியாக கேள்விகள் எல்லாம் கேட்டார்.

பிக் பாஸால் பிந்துவுக்கு விமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பறிபோயுள்ளது.

மன்னர் வகையறா

மன்னர் வகையறா

பூபதி பாண்டியன் விமலை வைத்து இயக்கும் மன்னர் வகையறா படத்தில் நடிக்க பிந்து மாதவியை ஒப்பந்தம் செய்தனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட அண்மையில் வெளியானது.

ஷூட்டிங்

ஷூட்டிங்

படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஒரேயொரு பாடலை மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருப்பதால் இந்த படத்தில் இருந்து பிந்து மாதவி நீக்கப்பட்டுள்ளார்.

பிந்து

பிந்து

திடீர் என்று பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டதால் நாங்கள் வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்துவிட்டோம். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஓவியா

ஓவியா

பிக் பாஸ் வீட்டில் இருந்ததால் விஜய் சேதுபதியின் சீதக்காதி பட வாய்ப்பை இழந்தார் ஓவியா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓவியாவுக்கு கோலிவுட்டில் ஏக மவுசு.

English summary
Bindu Madhavi is not able to be part of Vimal's Mannar Vagera as she is in Big Boss house.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil