»   »  படமாகும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு: யார் நடித்தால் நல்லா இருக்கும்?

படமாகும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு: யார் நடித்தால் நல்லா இருக்கும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 1950, 60 மற்றும் 70களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்ட நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. சாவித்ரியாக நடிக்க வித்யா பாலன் அல்லது நயன்தாரா பொருத்தமாக இருப்பார்கள்.

1936ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி ஆந்திராவில் பிறந்தவர் சாவித்ரி. 1952ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அடி எடுத்து வைத்த அவர் தமிழ், கன்னடம், இந்தி மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

1950, 60, 70களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டிருந்தவர் சாவித்ரி.

நடிகையர் திலகம்

நடிகையர் திலகம்

பூசினாற் போன்ற உடல்வாகுடன் இருந்த சாவித்ரி நடிப்பில் அசத்தியவர். நடிகையர் திலகம் பட்டம் பெற்றவர். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்.

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் என்று போற்றப்பட்ட சிவாஜி கணேசனே சாவித்ரியின் நடிப்பை பார்த்து மிரண்டு பயந்தவர். இவர் நம்மை நடிப்பில் தூக்கி சாப்பிட்டுவிடுவார் என்று சிவாஜியே சாவித்ரி பற்றி தெரிவித்துள்ளார்.

ஜெமினி கணேசன்

ஜெமினி கணேசன்

உச்ச நடிகையாக இருந்த சாவித்ரி காதல் மன்னன் ஜெமினி கணேசனை காதலித்து மணந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். சென்னையில் நீச்சல் குளத்துடன் பெரிய பங்களா கட்டிய முதல் நடிகை சாவித்ரி.

கஷ்டம்

கஷ்டம்

ஏழைக் குடும்பத்தில் பிறந்து நடித்து சம்பாதித்து செல்வச் சீமாட்டியாக வாழ்ந்த அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து கடைசிக் காலத்தில் வறுமையில் வாடி இறந்தார். சிவாஜியும், சாவித்ரியும் சேர்ந்து நடித்த பாச மலர் படம் காலத்தால் அழியாத காவியம் ஆகும்.

படம்

படம்

நாக் அஷ்வின் என்பவர் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்குகிறார். திரைக்கதை எழுதும் வேலையை முடித்துவிட்டார் அஷ்வின். இந்த படம் இந்திய சினிமா கண்டிறாத படமாக இருக்கும் என்று அஷ்வின் தெரிவித்துள்ளார்.

யார் நடிப்பார்?

யார் நடிப்பார்?

சாவித்ரி கதாபாத்திரத்தில் எந்த நடிகை நடித்தால் நன்றாக இருக்கும்? வாழ்க்கை வரலாறு என்று கூறியதுமே வித்யா பாலன், நயன்தாராவின் நினைவு தான் வருகிறது. சில்க்கின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் அருமையாக நடித்தவர் வித்யா பாலன். அவரிடம் சாவித்ரி கதாபாத்திரத்தை கொடுத்தால் அசத்திவிடுவார். இதே போன்று நயன்தாராவும் சாவித்ரி கதாபாத்திரத்தில் பொருந்துவார்.

English summary
Director Nag Ashwin, will helm a Telugu-Tamil bilingual biopic on the life of late legendary southern actress Savitri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil