»   »  படமாகிறது ரஜினியின் வாழ்க்கை: ரகசியங்களை புட்டு புட்டு வைக்கப் போகும் மகள்கள்

படமாகிறது ரஜினியின் வாழ்க்கை: ரகசியங்களை புட்டு புட்டு வைக்கப் போகும் மகள்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிந்காந்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டுள்ளதாக அவரின் இளைய மகள் சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பேருந்தில் கண்டக்டராக இருந்த சிவாஜி ராவ் கெய்க்வாட் ஒரு சுபயோக சுபதினத்தில் தமிழகத்திற்கு வந்தார். திரைத்துறையில் நுழைந்த அவர் போராடி வெற்றி கண்டார்.

கண்டக்டர் கெய்வாட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆனார். தமிழகம் அவரை வாழ வைத்தது, வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

படம்

படம்

ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டுள்ளனர் அவரது மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும். இந்த தகவலை சவுந்தர்யா ரஜினிகாந்தே உறுதி செய்துள்ளார்.

ரஜினி

ரஜினி

ஆமாம், அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டுள்ளோம். என் அக்கா ஐஸ்வர்யா அப்பா பற்றி புத்தகம் எழுதி வருகிறார். அந்த புத்தகத்தை மையமாக வைத்து கதை எழுதப்படும் என்கிறார் சவுந்தர்யா.

ரகசியங்கள்

ரகசியங்கள்

அப்பாவின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் ஆசை. அப்பாவின் வாழ்க்கை பலருக்கு முன்மாதிரி. அவரின் வாழ்க்கையின் சில கட்டங்கள் குறித்து யாருக்கும் தெரியாது. அதை எல்லாம் படத்தில் காட்ட விரும்புகிறோம் என்று சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

நானும் ரசிகையே

நானும் ரசிகையே

நானும் அப்பாவின் தீவிர ரசிகை தான். அவரை பெரிய திரையில் பார்ப்பது மகிழ்ச்சி. அப்படி இருக்கும்போது அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக பார்க்க ஆசையாக உள்ளது என்று கூறுகிறார் சவுந்தர்யா.

English summary
As superstar Rajinikanth's fame reaches farther and wider with each of his release, making a biopic on him would be on the mind of many film-makers across the world.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil