»   »  பிபாஷாவுக்கு திருமணப் பரிசாக... 10 கோடி ரூபாய் வீட்டைக் கொடுத்தாரா சல்மான் கான்?

பிபாஷாவுக்கு திருமணப் பரிசாக... 10 கோடி ரூபாய் வீட்டைக் கொடுத்தாரா சல்மான் கான்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது திருமணப் பரிசாக சல்மான் கான் 10 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டைப் பரிசாகக் கொடுத்ததாக எழுந்த வதந்திகளுக்கு, நடிகை பிபாஷா பாசு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

ஜான் ஆப்ரஹாமை உருகி உருகிக் காதலித்த பிபாஷா தற்போது கரண் சிங் குரோவரின் மனைவியாகி இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற இவர்கள் திருமண வரவேற்பில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Bipasha Basu Denies the Wedding Gift Rumors

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் சல்மான் கான், பிபாஷா பாசுவின் திருமணப் பரிசாக 10 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டைக் கொடுத்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

தொடர்ந்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இந்த வதந்திக்கு பிபாஷா தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் ''இதுபோன்ற அபத்தமான செய்திகளை நான் படிக்க வேண்டி இருக்கிறது.

நான் ஏன் மற்றவர்களிடம் இருந்து பரிசுப்பொருளை வாங்க வேண்டும்?'' என்று கேட்டிருக்கிறார்.

English summary
Bollywood Actress Bipasha Basu now Denies the Wedding Gift Rumors.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil