மாதவனுடன் முத்தக்காட்சியில் நடிக்க தயங்கிய நடிகை...அப்படி என்ன செய்தார் மாதவன்?
மும்பையில் : மாதவனுடன் முத்தக்காட்சியில் தான் நடிக்க தயங்கியதாகவும், அதற்கு மாதவனிடம் இருந்த ஒரு கெட்ட பழக்கம் தான் காரணம் என்ன என்பதையும் பிரபல நடிகை ஒருவர் ஓப்பனாக மீடியாக்களில் பகிர்ந்துள்ளார். மாதவனுடன் நடிப்பதில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பல ஆண்டுகளுக்கு பின் அவர் பகிர்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நடிகர் மாதவன் தற்போது படங்களை விட, வெப் சீரிஸ்களில் அதிகம் நடித்து வருகிறார்கள். ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்தின் மூலம் டைரக்டராகவும் அறிமுகமாக உள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த நடத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் ரோலில் மாதவன் நடித்துள்ளார். அவருடன் இணைந்து சிம்ரன் நடித்துள்ளார்.

பிபாசா பாசு பகிர்ந்த ரகசியம்
சில ஆண்டுகளுக்கு முன் வரை நடிகைகளே மாதவனின் தீவிர ரசிகையாக இருந்தனர். மாதவனுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பலர் ஏங்கி உள்ளனர். ஆனால் பிரபல நடிகையான பிபாசா பாசு, மாதவனுடன் சேர்ந்து நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பல ஆண்டுகள் கழித்து தற்போது பகிர்ந்துள்ளார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சாப்பிட்டிற்காக தவித்த மாதவன்
மாதவனும், பிபாசா பாசுவும் இணைந்து Jodi Breakers என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இதன் ஷுட்டிங் 2012 ம் ஆண்டு நடைபெற்றது. கிரீக் நாட்டில் உள்ள Mykonos தீவில் இந்த ஷுட்டிங் நடத்தப்பட்டுள்ளது. கிட்டதட்ட 12 முதல் 13 நாட்கள் இங்கு ஷுட்டிங் நடத்தப்பட்டுள்ளது. அப்போது அங்கு இந்திய உணவுகள் கிடைப்பது மிக சிரமமாக இருந்ததாம். ஆனால் மாதவன் மிகப் பெரிய சாப்பாட்டு பிரியராம்.

மாதவன் சுவைத்த பஞ்சாபி உணவுகள்
ஷுட்டிங்கில் கலந்து கொள்வதற்காக பஞ்சாபி பசங்கள் சிலர் அங்கு வருவார்களாம். அவர்களிடம் நல்ல சாப்பாடு எங்கு கிடைக்கும் என படக்குழுவினர் விசாரித்துள்ளனர். பிறகு மாதவன் உள்ளிட்ட படக்குழுவினர் அந்த இடத்திற்கு சென்று பஞ்சாப் உணவு அயிட்டங்களான பட்டர் சிக்கன், மக்கி தி ரொட்டி, சாலட்ஸ், வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வயிறு முட்ட சாப்பிட்டுள்ளனர்.

முத்தக்காட்சியில் நடிக்க தயக்கம்
எதிர்பாராத விதமாக அன்று மாதவன், பிபாசா பாசுவுடன் முத்தக்காட்சி ஒன்றில் நடிக்க வேண்டி இருந்ததாம். முதலில் மாதவனின் மனைவி சரிதாவும் ஷுட்டிங்கிற்கு வந்திருந்ததால் மாதவனுடன் முத்தக்காட்சியில் நடிக்க பிபாசா தயங்கினாராம். ஆனால் டைரக்டர் அஸ்வினி செளத்ரி, அவரிடம் பேசி சமாதானப்படுத்தி, நடிக்க சம்மதிக்க வைத்தாராம். இந்த முத்தக்காட்சியில் மாதவனுடன் நடித்த பிறகு உடனடியாக வேகமாக தனது மேக்அப் ரூமிற்கு சென்ற பிபாசா வெகு நேரமாக வெளியே வரவேயில்லையாம்.

இது தான் காரணமா
பிறகு அதற்கான காரணத்தை விசாரித்த போது, மாதவன் அளவுக்கு அதிகமாக வெங்காயம் சாப்பிட்டதால் அந்த மணம் பிடிக்காமல் அவருடன் முத்தக்காட்சியில் நடிக்க பிபாசா பெரிதும் தயங்கினாராம். இந்த மோசமான அனுபவத்தை அவரே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகீர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











