»   »  பிரபல பாலிவுட் நடிகரின் 3 வது மனைவியாக மாறும் பிபாஷா பாசு

பிரபல பாலிவுட் நடிகரின் 3 வது மனைவியாக மாறும் பிபாஷா பாசு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியின் ஹாட் நடிகைகளில் ஒருவரான பிபாஷா பாசு-கரண் சிங் குரோவர் திருமணம் வருகின்ற ஏப்ரல் 28 ம் தேதி நடைபெறவுள்ளது.

பாலிவுட் நடிகரான கரண் சிங் குரோவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றவர். மேலும் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பதற்காக அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

Bipasha Basu - Karan Singh Grover Wedding Date

ஏற்கனவே 2 பெண்களை மணந்து இருவரிடமும் விவாகரத்து பெற்றவர் கரண் சிங். குறிப்பாக பிபாஷா மீதான இவரின் காதல்தான், 2 வது மனைவி ஜெனிபர் வின்ஜெட்டை விவாகரத்து செய்யக் காரணமானது.

காதல் லீலைகளில் பிபாஷா பாசு, கரணுக்கு சற்றும் சளைத்தவரல்ல. ஏற்கனவே டினு மொரியா, ஜான் ஆப்ரகாம், ஹர்மன் பவேஜா என்று காதலில் ஹாட்ரிக் அடித்தவர் பிபாஷா.

மேலும் ஜான் ஆப்ரகாம்- பிபாஷா பாசுவின் பல வருடக்காதல் இந்த உலகமே அறிந்த ஒன்று. பல வருடங்களாக காதலித்து வந்த இருவரும் கடந்த 2011 ம் ஆண்டு பிரிந்தனர்.

இந்நிலையில் தன்னைவிட 3 வயது குறைவான கரண் சிங் குரோவரைக் காதலித்து வந்த பிபாஷா, தற்போது அவரை மணந்து திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க முடிவு செய்திருக்கிறார்.

பிபாஷா பாசு- கரண் சிங் குரோவர் திருமணம் வருகின்ற ஏப்ரல் 28 ல் நடைபெறுகிறது.பஞ்சாபி முறைப்படி நடக்கவுள்ள இந்தத் திருமணத்தில், இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மறுநாள் நடைபெறும் திருமண வரவேற்பில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

English summary
Bipasha Basu - Karan Singh Grover Wedding Date Now Revealed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil