»   »  2 முறை விவாகரத்தான தன்னை விட 3 வயது குறைவான நடிகரை மணக்கும் விஜய்யின் 'ஐட்டம் கேர்ள்'

2 முறை விவாகரத்தான தன்னை விட 3 வயது குறைவான நடிகரை மணக்கும் விஜய்யின் 'ஐட்டம் கேர்ள்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கும், நடிகர் கரண் சிங் குரோவருக்கும் வரும் 30ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவும், நடிகர் ஜான் ஆபிரகாமும் 9 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். அழுகு ஜோடி, அசத்தல் ஜோடி என்று பாலிவுட்காரர்களும், மீடியாக்களும் புகழந்து வந்தனர்.

யார் கண் பட்டதோ பிபாஷாவும், ஜானும் பிரிந்துவிட்டனர். ஜான் பிரியா என்பவரை திருமணம் செய்து குடும்பஸ்தராகிவிட்டார்.

பிபாஷா

பிபாஷா

ஜான் ஆபிரகாமை பிரிந்த பிபாஷா நடிகர் ஹர்மன் பவேஜாவை காதலித்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்பட்டது. ஆனால் நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று அவர்கள் அறிவிப்பு வெளியிட்டனர்.

கரண் சிங் குரோவர்

கரண் சிங் குரோவர்

படத்தில் சேர்ந்து நடிக்கையில் பிபாஷாவுக்கும் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆன கரண் சிங் குரோவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் கை கோர்த்து ஜோடியாக வலம் வந்தனர்.

திருமணம்

திருமணம்

கரண், பிபாஷா திருமணம் வரும் 30ம் தேதி நடக்கும் என்று இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கரண் பிபாஷாவை விட 3 வயது சின்னவர். ஏற்கனவே பாலிவுட்டில் பல பிரபல நடிகைகள் தங்களை விட சிறியவர்களை திருமணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா சோப்ரா

கரண், பிபாஷா தங்களின் திருமணம் குறித்து அறிவிக்கும் முன்பே அவர்களின் திருமணத்தை உறுதி செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இது குறித்து பிரியங்கா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என் தோழி பிபாஷா மற்றும் அவரது அழகான காதலர் கரணுக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actress Bipasha Basu and actor Karan Singh Grover are getting married on april 30th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil