தவறாக நடக்க முயன்றதால் படத்தில் இருந்து விலகினேன்.. முன்னணி தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை புகார்!

By

மும்பை: முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதால் அவர் படத்தில் இருந்து விலகினேன் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

Recommended Video

நடிகை ஸ்வேதா பாசு இயக்குனர் ரோஹித் கல்யாண ஆல்பம்- வீடியோ

பிரபல இந்தி நடிகை பிபாஷா பாசு. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தமிழிலும் நடித்துள்ளார்.

ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா நடித்த சச்சின் படத்தில் நடித்திருந்தார்.

கரண் சிங் குரோவர்

கரண் சிங் குரோவர்

இவர் 1996 ஆம் ஆண்டு நடிகர் டினோ மோரியாவை காதலித்து வந்தார். சில வருடங்கள் தொடர்ந்த இவர்கள் காதல் பிறகு முறிந்தது. அடுத்து ஜான் ஆபிரஹாமை காதலித்து வந்த பிபாஷா அவரிடம் இருந்தும் விலகினார். பிறகு அலோன் என்ற படத்தில் நடித்தபோது தன்னுடன் நடித்த கரண் சிங் குரோவர் மீது காதல் வயப்பட்டார். இவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

தவறாக நடக்க முயன்றார்

தவறாக நடக்க முயன்றார்

இருவரும் இணைந்து டேஞ்சரஸ் என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளனர். விக்ரம் பட் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸ், 7 பாகங்களைக் கொண்டது. கடந்த 14 ஆம் தேதி இதன் முதல் பாகம் ரிலீஸ் ஆனது. இதில், சோனாலி ராவத், நடஷா சுரி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று கூறியுள்ளார்.

கண்டு பயந்தார்கள்

கண்டு பயந்தார்கள்

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: அப்போது நான் சினிமாவுக்கு புதிதாக வந்திருந்தேன். மும்பையில் தனியாக இருந்தேன். அதனால் எப்போதும் என்னைக் கடுமையாகக் காட்டிக்கொள்வேன். அதனால் என்னைக் கண்டு பயந்தார்கள். ஆனால், அப்படியும் எனக்கு ஒரு சம்பவம் நடந்தது. ஒரு முன்னணி தயாரிப்பாளரின் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் எனக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது.

புன்னகை காணவில்லை

புன்னகை காணவில்லை

அந்த தயாரிப்பாளர்தான் அனுப்பி இருந்தார். அதில், உங்கள் புன்னகையை காண முடியவில்லை என்றும் இளமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறீர்கள் என்றும் கூறப்பட்டு இருந்தது. நான் அதைக் கண்டுகொள்ளவில்லை. சில நாட்களுக்குப் பிறகு அதே குறுஞ்செய்தியை மீண்டும் அனுப்பினார். பிறகு நண்பருக்கு அனுப்பப்பட வேண்டிய, ஓர் ஆச்சரிய அனுபவத்தை பற்றிய விரிவான குறுஞ்செய்தியை அவருக்கு தவறாக அனுப்பிவிட்டேன்.

நடிக்க மாட்டேன்

நடிக்க மாட்டேன்

அது வேலை செய்தது. அதை படித்தபிறகு அவரிடம் இருந்த எந்த செய்தியும் எனக்கு வரவில்லை. பிறகு என் செகரட்டரியை அழைத்து அவரிடம் வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விடுமாறும் இனி அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் சொன்னேன். பின்னர் அந்த தயாரிப்பாளரை ஒரு விழாவில் கண்டேன். என்னைப் பார்த்ததுமே அமைதியாக நடந்து சென்றார். அப்போது அவரைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. இவ்வாறு பிபாஷா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X