Dhanush Net worth: பர்த்டே பாய் தனுஷின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
சென்னை: துள்ளுவதோ இளமை படத்தில் ஆரம்பித்த பயணம் இன்று ஹாலிவுட்டின் தி கிரே மேன் வரை அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
தோள் மேல் கை போட்டு பேசும் அளவுக்கு மகன்கள் வளர்ந்து விட்ட நிலையிலும், இப்பவும் அவர்களின் யூனிபார்ம் போட்டு வாத்தியாக நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.
மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்தாலும், தனுஷுக்கென அவர் சேர்த்து வைத்துள்ள தனிச் சொத்துக்கள் குறித்தும் அவற்றின் மதிப்பு பற்றியும் இங்கே பார்ப்போம்.

39வது பிறந்தநாள்
இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு மகனாக 1983ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி பிறந்த நடிகர் தனுஷ் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அப்பா இயக்கத்தில் அண்ணன் செல்வராகவன் திரைக்கதையில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அடியெடுத்து வைத்தார் நடிகர் தனுஷ்.

அண்ணன் இயக்கத்தில்
அண்ணன் செல்வராகவன் கதையில் உருவான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ், தொடர்ந்து அண்ணன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்பவும் அண்ணன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வரும் தனுஷ், மேலும், புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திலும் நடிக்க ஓகே சொல்லி உள்ளார்.

மனைவியை பிரிந்தாலும்
இந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி திடீரென தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரியப் போவதாக அறிவித்தது அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மனைவியை பிரிந்தாலும், தொடர்ந்து தனது மகன்கள் இருவருடன் எப்போதும் போல தொடர்பில் இருக்கிறார். சமீபத்தில், தி கிரே மேன் படத்தின் அமெரிக்க ப்ரீமியருக்கும் மகன்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டி இருந்தார்.

அதிகரித்த சம்பளம்
7 முதல் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த நடிகர் தனுஷ் தற்போது 20 ,முதல் 25 கோடி வரை சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டோலிவுட்டில் வாத்தி படத்தில் நடித்து வரும் தனுஷ், மீண்டுமொரு டோலிவுட் இயக்குநரான சேகர் கம்முலா படத்தில் நடிக்க அவருக்கு 50 கோடி வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

போயஸ் கார்டனில் பங்களா
ஆழ்வார்பேட்டையில் சொகுசு பங்களாவில் வாழ்ந்து வரும் நடிகர் தனுஷ், போயஸ் கார்டனில் படு காஸ்ட்லியான பங்களா ஒன்றை கட்டி வருகிறார். அதன் பூமி பூஜைக்கு ரஜினிகாந்த் கலந்து கொண்டார். ஆனால், தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து விட்ட நிலையில், தனுஷ் அந்த பங்களாவுக்கு குடியேறுவாரா? இல்லையா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்
3.40 கோடி மதிப்பிலான பென்ட்லி கான்டினென்டல் ஜிடி கார் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ப்ரீமியம் பிளாக் கார் என இரு சொகுசு கார்களை வைத்திருக்கிறார் நடிகர் தனுஷ். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் விலை சுமார் 7 முதல் 8 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

சொத்து மதிப்பு
நடிகர் தனுஷின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 160 முதல் 180 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம், பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு அவர் வாங்கிய அதிக சம்பளம் என பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கு சொந்தக்காரராக உள்ளார் பர்த்டே பாய் தனுஷ். சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் நடிகர் தனுஷை வாழ்த்தி வருகின்றனர். Happy Birthday Dhanush!


Click it and Unblock the Notifications











