»   »  பிறந்தநாள், தீபாவளி கொண்டாடப் போவதில்லை - அமிதாப் பச்சன் அறிவிப்பு

பிறந்தநாள், தீபாவளி கொண்டாடப் போவதில்லை - அமிதாப் பச்சன் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் திரையுலகம் தொடர்பாகவும், நாட்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். ட்விட்டரில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 3 மில்லியனை தொட்டுள்ளது.

வரும் அக்டோபர் 11-ம் தேதி அமிதாப் பச்சனுக்கு 75-வது பிறந்தநாள். இந்நிலையில், இந்த ஆண்டு தனது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார்.

Birthday and Diwali will not celebrate - Amitabh Bachchan

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பில், இந்த ஆண்டு எனது 75-வது பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாடப் போவதில்லை எனக் கூறியுள்ளார். நடிகையும், தனது மருமகளுமான ஐஸ்வர்யா ராயின் தந்தை, உடல்நலக்குறைவு காரணமாக இந்த ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார்.

இந்தத் துக்கத்தில் இருந்து அவர்கள் மீண்டு வராததால், பிறந்தநாள் போன்ற கொண்டாட்டங்களைத் தவிர்க்க அமிதாப் பச்சன் முடிவு செய்துள்ளாராம். இதைக் கருத்தில் கொண்டே அமிதாப் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

English summary
Amitabh Bachchan followers on twitter has now reached 3 million. Amitabh Bachchan's 75th birthday is on October 11th. He announced that he will not celebrate his birthday and Diwali this year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil