»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

அன்னதானம், சிறப்பு பூஜைகள், இலவச உதவிகள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 52-வது பிறந்த நாள் விழாபுதன்கிழமை (டிச.12) அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 52வது பிறந்த நாளை புதன்கிழமை கொண்டாடினார். வழக்கம் போல தமிழ்மண்ணில் தனது பிறந்த நாளைக் கொண்டாடாமல் பெங்களூர் சென்று கொண்டாடியதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவரைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்த ஏராளமானதமிழ் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர்.

ஆனால் ரஜினி ரசிகர் மன்றத்தில் வழக்கம் போல தங்களது தலைவரின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் உள்ள முக்கியக் கோவில்களில் ரஜினி பெயரில் சிறப்பு அர்ச்சனைகள்,பூஜைகள் செய்யப்பட்டன.

ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா தலைமையில் ரஜினி ரசிகர்கள், ஏழைகள், ஊனமுற்றோர்,முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

சென்னையில் உள்ள ஒரு சத்துணவுக் கூடத்திற்கு தட்டுகள், பாய்கள், தம்ளர்கள் ஆகியவை ரஜினி சார்பில்வழங்கப்பட்டன.

Read more about: celebration cinema fans

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil