Bison Day 7 Box Office - பைசன் 7வது நாள் வசூல் இத்தனை கோடிதானா?.. முழு விவரம் இதோ

சென்னை: துருவ் விக்ரம் நடித்திருக்கும் பைசன் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. மாரி செல்வராஜ் தொடர்ச்சியாக கொடுக்கும் ஐந்தாவது ஹிட் இது. இதனால் கோலிவுட்டில் தோல்வியே கொடுக்காத இயக்குநர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் அவர். இந்நிலையில் படம் ரிலீஸான ஏழாவது நாளில் எவ்வளவு வசூலாகியிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் பைசன் காளமாடன். அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டாலும் முழுக்க முழுக்க பயோபிக்காக உருவாகவில்லை. மாறாக பசுபதி பாண்டியனுக்கும் வெங்கடேச பண்ணையாருக்கும் நிகழ்ந்த மோதல், தென் மாவட்ட இளைஞர்களின் வாழ்வியல் என பல விஷயங்களை இதில் பேசியிருந்தார் இயக்குநர்.

பாராட்டு மழையில் பைசன் காளமாடன்: படத்தில் மாரி செல்வராஜ் பேசியிருந்த அத்தனை விஷயங்களும் அனைவரிடமும் பாராட்டை பெற்றிருக்கிறது. வழக்கம்போல் ஒருதரப்பினர் இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் பாராட்டு மழையில் நனைந்துவிட்டது படம். ரஜினி, லிங்குசாமி, வசந்தபாலன், சேரன், இரா. சரவணன் என பெரும்பாலானோர் பெருமையோடு இந்தப் படத்தை முன் நிறுத்தியிருக்கிறார்கள்.

Bison Day 7 Box Office is Just 1 50 Crores in india One Week Collection is 27 15 Crores
Photo Credit:

துருவ் விக்ரமுக்கு சிறப்பான தொடக்கம்: இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் துருவ் விக்ரமுக்கு சிறப்பான தொடக்கமாக அமைந்திருக்கிறது இந்தப் படம். இரண்டரையிலிருந்து மூன்று வருடங்கள் கபடி பயிற்சி பெற்றும், திருநெல்வேலியில் வாழ்ந்து அந்த ஊர் வாழ்வியலை கற்றுக்கொண்டும் இப்படத்தில் நடித்திருந்தார். உழைப்புக்கேற்ற ஊதியமாக அவருக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கின்றன. இனி அவரது பயணம் சிறப்பாக இருக்கும் என்று நம்பலாம்.

போட்டிக்கு வந்தாலும் தோல்வி இல்லை: இப்படத்துக்கு போட்டியாக பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட், ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் ஆகிய இரண்டு படங்கள் வந்தன. அந்தப் படங்களும் நல்ல வரவேற்பை பெறவே செய்தன. இருப்பினும் பைசனின் வெற்றியும், வசூலும் அந்தப் படங்களால் பாதிக்கப்படவில்லை. நேற்றைய முன்தின கணக்குப்படி உலகம் முழுவதும் 35 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது.

ஒரு வார வசூல்: இந்நிலையில் படம் வெளியாகி நேற்றோரு ஒருவாரம் நிறைவடைந்துவிட்டது. ஏழாவது நாளான நேற்று பைசன் செய்த வசூல் பற்றிய தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் மட்டும் 1.50 கோடி ரூபாயை வசூலித்து மொத்தம் ஒரு வாரத்தில் 27.15 கோடி ரூபாயை அள்ளியிருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X