Udhayanidhi: வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில்.. உதயநிதி ஸ்டாலின் பைசன் விமர்சனம்!

சென்னை: ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் ஹரி ஹர வீர மல்லு, ஓஜி என இந்த ஆண்டு தொடர்ந்து 2 படங்களை ரிலீஸ் செய்து ஹிட் கொடுத்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பைசன் படத்துக்கு விமர்சனம் செய்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார். சந்தானத்துடன் அவர் இணைந்து பண்ண காமெடி காட்சிகள் எல்லாம் வேறலெவலில் ஹிட் அடித்தன. கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலுவுடன் இணைந்து அவர் நடித்த மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அவருக்கு அமைந்தது.

Bison Review by Udhyanidhi Stalin he praised Mari Selvaraj and Dhruv Vikram
Photo Credit:

அரசியலுக்கு வருகை தந்த நிலையில், இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் பொறுப்பையும் துறந்து துணை முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

மாரி செல்வராஜின் பைசன்: இந்த தீபாவளி வின்னரே மாரி செல்வராஜின் பைசன் திரைப்படம் தான் என நேற்று இரவு ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோ பார்த்த பலரும் ட்விட்டரில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். கபடி வீரரின் கதையை மையமாக வைத்து அவரை சுற்றி நடந்த சாதிய சிக்கல்களையும் வன்முறைகளையும் கதைக்கருவாக மாற்றி மாரி செல்வராஜ் தனது பைசன் காளமாடன் படத்தை இயக்கியுள்ளார். சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனக்கு இதுதான் முதல் படம் என்றும் சொல்லும் அளவுக்கு பைசன் படம் அவரது மனதையும் கவர்ந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்: "#Bison திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் @mari_selvaraj சார்.

வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.

ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் craft செய்திருக்கிறார்.

படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி @DhruvVikram5 உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.

பைசன் - காளமாடன் வெல்லட்டும்!" என உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் கொடுத்துள்ளார்.

ஒயிட் சட்டை மாறன்: உதயநிதி ஸ்டாலின் பைசன் படத்துக்கு விமர்சனம் கொடுத்த நிலையில், அவரது ட்வீட்ட்க்கு கீழ் பலரும் ஒயிட் சட்டை மாறன் என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். அப்படியே டீசல் மற்றும் டியூட் படத்துக்கும் விமர்சனம் கொடுத்து விடுங்கள் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து இன்பன் உதயநிதி ஹீரோவாக போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், மாரி செல்வராஜ் படத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

தீபாவளி வின்னர் ஆகுமா?: பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஓபனிங் வசூலை பெற்றுவிடும். ஆனால், அந்த படம் ரசிகர்களை கவரவில்லை என்றால், பைசன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கவும் தீபாவளி வின்னராகவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X