மஜாபா.. மஜாபா.. வாக்கு கேட்க போன இடத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட நமீதா.. வானதி!
சென்னை: தேர்தல் பிரசாரத்தின் போது வாத்தி கம்மிங் பாடலுக்கு நமீதாவுடன் சேர்ந்து வானதியும் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

உற்சாக வரவேற்பு
இந்நிலையில் கோவையில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகை நமீதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஆட்டம்பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அசத்தல் ஆட்டம்
விஜய்யின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு அவர்கள் அசத்தல் ஆட்டம் போட்டு வரவேற்றனர். இதனை தொடர்ந்து கீழே இறங்கிய நமீதா, வானதி சீனிவாசன் மற்றும் பாஜகவின் பெண் தொண்டர்கள் அவர்களுடன் செம ஆட்டம் போட்டனர்.
வானதி கம்மிங்
அந்த வீடியோவை வானதி சீனிவாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் வானதி கம்மிங் என்றும் அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் வானதி சீனிவாசன்.

ஜோசப் விஜய் பாட்டு
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் விஜய்யின் பாட்டு என்பதால் என்னங்க ஜோசப் விஜய் பாட்டுக்கு டான்ஸ் ஆடுறீங்க என்று கேட்டு கலாய்த்துள்ளனர்.

அந்த விஷயம்
நடிகர் விஜய்யை ஜோசப் விஜய் என்று கூறிய பாஜகவின் ஹெச் ராஜா அவரது அடையாள அட்டைகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்நிலையில் அந்த விஷயத்தை வானதியின் இந்த வீடியோவை பார்த்து நினைவு கூர்ந்துள்ளனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











