»   »  மெர்சலை அடுத்து பிரமாண்ட படத்தை எதிர்க்கும் பாஜக: கவலையில் இயக்குனர்

மெர்சலை அடுத்து பிரமாண்ட படத்தை எதிர்க்கும் பாஜக: கவலையில் இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி பத்மாவதி என்ற பெயரில் படமாக்கியுள்ளார். படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே பிரச்சனையாக உள்ளது.

ராஜ்புட் கர்ணி சேவா அமைப்பினர் செட்டுக்குள் புகுந்து நாசப்படுத்தி பன்சாலியை தாக்கினர்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

பத்மாவதி படத்தில் வரலாற்றை திரித்துக் கூறியுள்ளதாக தான் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி குஜராத் மாநில பாஜக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

திரையிடல்

திரையிடல்

பத்மாவதி படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு சத்திரிய சமூகத்தை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு போட்டுக் காட்ட வேண்டும். இல்லை என்றால் படத்தை ரிலீஸ் செய்ய விடக் கூடாது என்று பாஜக தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

பத்மினி

பத்மினி

பத்மாவதி படத்தை சத்திரிய சமூகத்தினருக்கு போட்டுக்காட்டாமல் வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் என்று முன்னாள் குஜராத் முதல்வரும், சத்திரிய சமூகத்தின் தலைவருமான ஷங்கர்சிங் வகேலாவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணி

ராணி

அலாவுத்தீன் கில்ஜியுடன் ராணி பத்மினியை இணைத்து காட்டுவது வரலாற்றை மாற்றுவதாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று பாஜக தெரிவித்துள்ளது. பத்மினியும், கில்ஜியும் நிஜத்தில் நேரில் சந்தித்தது இல்லை என்கிறது பாஜக.

எதிர்ப்பு

எதிர்ப்பு

பத்மாவதி படத்தில் அலாவுத்தீன் கில்ஜி, ராணி பத்மாவதி இடையே காதல் காட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதை நம்பிக் கொண்டு தான் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் படத்தில் கில்ஜி, பத்மாவதி இடையே காதல் காட்சிகள் எதுவும் இல்லை என்று பன்சாலி பலமுறை தெரிவித்தும் யாரும் அவரை நம்பத் தயாராக இல்லை.

English summary
The BJP has approached the Election Commission seeking its intervention to stop the release of Bollywood film "Padmavati" without a pre-release screening by the Kshatriya community, saying "distortion of facts" in the movie will hurt their sentiments.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil