»   »  டைட்டானிக்கை தூக்கிச் சாப்பிட்ட 'பிளாக் பேந்தர்' - வசூலை கேட்டா ஆடிப்போய்ருவீங்க..!

டைட்டானிக்கை தூக்கிச் சாப்பிட்ட 'பிளாக் பேந்தர்' - வசூலை கேட்டா ஆடிப்போய்ருவீங்க..!

Posted By:
Subscribe to Oneindia Tamil
டைட்டானிக்கை பாக்ஸ் ஆஃபிஸில் முறியடித்த ப்ளாக் பாந்தர்!

ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் மார்வல் காமிக்ஸ் என்றால் ஹாலிவுட் பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான்.

கடந்த மாதம் மார்வெல் காமிக்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ஹாலிவுட் படம் பிளாக் பேந்தர். வால்ட் டிஸ்னி வெளியிட்ட இந்தப் படத்தில் 90 சதவிகிதம் கருப்பின மக்கள் நடித்திருந்தனர்.

இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து வருகிறது பிளாக் பேந்தர். இதுவரை உலகம் முழுவதும் 1.3 பில்லியன் டாலர்கள் வசூலித்திருக்கிறது பிளாக் பேந்தர்.

பிளாக் பேந்தர்

பிளாக் பேந்தர்

மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களின் நீண்ட திரைப்பட வரிசையில் ப்ளாக் பேந்தர் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 'கேப்டன் அமெரிக்கா சிவில் வார்' திரைப்படத்தில் பிளாக் பேந்தர் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அந்தக் கதாபாத்திரத்துக்கென தனி படமாக இது உருவாகியுள்ளது.

கருப்பின அரசியல்

கருப்பின அரசியல்

கருப்பின நடிகர்கள், அவர்களது கலாச்சாரம், தற்போது நிலவும் கருப்பின அரசியல் என அமெரிக்க சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களின் பிரதிபலிப்பாகவே இந்தப் படம் உருவானது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

டைட்டானிக்கை முந்தியது

டைட்டானிக்கை முந்தியது

இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து வருகிறது பிளாக் பேந்தர். அதிக வசூல் சாதனை புரிந்திருந்த வெளிவந்த 'டைட்டானிக்' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்துள்ளது. அமெரிக்காவில் 'டைட்டானிக்' படத்தின் அதிக வசூலான 659 மில்லியன் டாலர்களை முந்தி 665 டாலரைக் கடந்துள்ளது பிளாக் பேந்தர்.

உலகம் முழுவதும் வசூல்

உலகம் முழுவதும் வசூல்

இதுவரை உலகம் முழுவதும் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்துள்ளது பிளாக் பேந்தர். இது இந்திய மதிப்பில் 8 ஆயிரத்து 400 கோடிக்கும் மேல். தொடர்ந்து 8-வது வாரமாக பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறது பிளாக் பேந்தர்.

மூன்றாவது இடம்

மூன்றாவது இடம்

இதுவரை வெளிவந்த ஹாலிவுட் படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது 'பிளாக் பேந்தர்'. 'The forec Awakens', 'அவதார் ஆகிய படங்களின் வசூல் சாதனையையும் விரைவில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரிசையாக வரும்

வரிசையாக வரும்

உலக அளவில் மட்டுமல்லாது இந்தியாவிலும் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் 5 கோடியைக் கடந்துள்ளது. பிளாக் பேந்தர் செம ஹிட் அடிக்க, அதைத் தொடர்ந்து 'அவெஞ்சர்ஸ் 3', 'டெட்பூல் 2' ஆகிய படங்கள் வரிசையாக வரவுள்ளது.

English summary
Hollywood movie Black Panther has broken the record of Hollywood films so far. Black Panther has collected $ 1.3 billion all over the world, breaks the 'Titanic' record.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X