twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாகுபலியாவது டங்கலாவது... பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட 'பிளாக் பேந்தர்'!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    பிளாக் பாந்தர் : பாக்ஸ் ஆபிஸ் கலெக்க்ஷன்

    சென்னை : 'பிளாக் பேந்தர்' ஹாலிவுட் திரைப்படம் அமெரிக்காவில் வெளியான மூன்று நாட்களில் மட்டும் 192 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

    டிஸ்னி மற்றும் மார்வெல் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'பிளாக் பேந்தர்'. மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களின் நீண்ட திரைப்பட வரிசையில் பிளாக் பேந்தரும் இடம்பெறுகிறது.

    உலகம் முழுவதும் 4 நாட்களில் இப்படம் 361 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ 2330 கோடி வசூலை தாண்டியுள்ளது 'பிளாக் பேந்தர்'.

    பிளாக் பேந்தர்

    பிளாக் பேந்தர்

    மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களின் நீண்ட திரைப்பட வரிசையில் ப்ளாக் பேந்தரும் இடம்பெறுகிறது. ஏற்கெனவே 'கேப்டன் அமெரிக்கா சிவில் வார்' திரைப்படத்தில் இந்த பிளாக் பேந்தர் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அந்தக் கதாபாத்திரத்துக்கென தனி படமாக உருவாகியுள்ளது.

    கருப்பின அரசியல்

    கருப்பின அரசியல்

    கருப்பின நடிகர்கள், அவர்களது கலாச்சாரம், தற்போது நிலவும் கருப்பின அரசியல் என அமெரிக்க சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களின் பிரதிபலிப்பாகவே இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

    வசூலில் சாதனை

    வசூலில் சாதனை

    இந்தப் படம் பல அமெரிக்க வசூல் சாதனைகளைப் படைத்துள்ளது. மார்வெல் சினிமாட்டிக் உலகில் வெளியான படங்களில் 3 நாட்களில் அதிக வசூல் என்ற பட்டியலில் 'அவெஞ்சர்ஸ்' முதலிடத்திலும் (207.4 மில்லியன்) 'ப்ளாக் பேந்தர்', 'அவெஞ்சர்ஸ் 2'-வை முந்தி, இரண்டாவது இடத்திலும் உள்ளது.

    முரட்டு வசூல்

    முரட்டு வசூல்

    ஹாலிவுட்டை பொறுத்தவரை தற்போது உலகம் முழுவதும் மார்க்கெட் உள்ளது. அதனாலேயே ஹாலிவுட்டிலிருந்து வரும் படங்கள் நல்ல வசூல் செய்து வருகின்றன. வெளிவந்த 4 நாட்களில் அமெரிக்காவில் மட்டுமே 192 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

    361 மில்லியன் டாலர்

    361 மில்லியன் டாலர்

    உலகம் முழுவதும் இப்படம் 4 நாட்களில் 361 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்திய மதிப்பில் வசூல் ரூ.2330 கோடியைத் தாண்டியுள்ளது. இத்தனைக்கும் சீனா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் படம் இனிமேல் தான் வெளியாகவுள்ளது. உலகம் முழுவதும் இன்னும் பல சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    The 'Black Panther' Hollywood movie collected 192 million us dollars in 4 days in America. This film has grossed over 361 million dollars in 4 days worldwide. Black Panther crosses Rs.2330 crores in indian rupees.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X