நல்லா வந்திருக்க வேண்டிய படம்.. கடைசியில.. ப்ளாக்மெயில் விமர்சனத்தில் ட்விஸ்ட் வைத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான ப்ளாக்மெயில் படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல தனது பாணியில் விமர்சனத்தை கொடுத்துள்ளார். இந்த வாரம் தமிழில் புதிதாக 10 படங்கள் ஒரே நாளில் போட்டிப் போட்ட நிலையில், பல படங்களின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை.
படத்தை பார்த்து விமர்சனம் செய்பவர்களே எந்த படத்தை பார்க்கலாம், எந்த படத்தை விடலாம் என்கிற நிலைக்கு சென்றுவிட்டனர். பொதுமக்களின் மன நிலையை சொல்லவா வேண்டும். கூலி, மதராஸி என தியேட்டருக்கு அதிக செலவு செய்த பலரும் இந்த வாரம் தியேட்டர் பக்கமே போக வேண்டாம் சாமி என்கிற நிலையில் தான் உள்ளனர்.

இந்த வாரம் வெளியான 10 படங்களில் சில படங்கள் ரசிகர்களை கவரும் வகையில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்புடன் வெளியாகி இருக்கிறது. அதில், ஒன்றான ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ப்ளாக்மெயில் படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன் அந்த படத்தில் வருவதை போல ட்விஸ்ட்டாக விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
ஃபர்ஸ்ட் ஹாஃப் நல்லா இருக்கு: ஸ்ரீகாந்த், பிந்து மாதவியின் குழந்தை கடத்தப்படுகிறது. இன்னொரு பக்கம் ஜி.வி. பிரகாஷ் குமாரின் வண்டி சரக்குடன் காணாமல் போக அதன் உரிமையாளர் ஜி.வி. பிரகாஷின் காதலியான தேஜு அஸ்வினியை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு ப்ளாக்மெயில் பண்ணுகிறார். இன்னொரு புறம் பிந்து மாதவியின் முன்னாள் காதலர் குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு ப்ளாக்மெயில் பண்ண கடைசியில் என்ன ஆனது என்பது தான் கதை என்றும் படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃப்பில் வைக்கப்பட்ட சில ட்விஸ்ட்டுகள் ரொம்பவே நல்லா இருந்தது என பாதி படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

செகண்ட் ஹாஃப் சொதப்பல்: செகண்ட் ஹாஃப் கர்ஸ் இந்த படத்தையும் விட்டு வைக்கவில்லை என்கிற ரீதியிலேயே ப்ளூ சட்டை மாறன் இரண்டாம் பாதியில், அந்த குழந்தைக்கும் அந்த காதலிக்கும் ஏதாவது ஆகிவிடக்கூடாது என்கிற பதட்டத்தை ஆடியன்ஸுக்கு கடத்தாமல் ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் இன்னமும் வைக்கிறேன் பாரு என இயக்குநர் ஓவர்டோஸாக போனது தான் படத்தை கெடுத்துவிட்டது என்று விமர்சித்துள்ளார்.
நல்லா வரவேண்டிய படம்: முதல் பாதி படம் இருந்ததற்கு 2வது பாதியும் அதே வேகத்தில் சென்று முடிந்திருந்தாலே படம் நல்ல படமாக வந்திருக்கும். ஆனால், ஓவராக போட்டு கதையை குழப்பி எடுத்துவிட்டு, ஒரு 10 கேரக்டர்களுக்குள்ளே படத்தை சுற்றிக் கொண்டு இருந்த நிலையில், நல்லா வரவேண்டிய படம் கடைசியில் சுமாரான படமாக மாறிவிட்டது என தனது விமர்சனத்திலும் ட்விஸ்ட் வைத்து விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் நடிப்பு சிறப்பு: தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பு இந்த படத்தில் சிறப்பாகவே உள்ளது என பலரும் பாராட்டி வருகின்றனர். ப்ளூ சட்டை மாறனும் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட எந்தவொரு நடிகரின் நடிப்பும் படத்தில் சொதப்பியதாக எங்கேயும் சொல்லவில்லை என்பது படக்குழுவுக்கு ஆறுதல்.


Click it and Unblock the Notifications











