»   »  பட ரிலீஸ் நேரத்தில் பஞ்சாயத்து.... தமிழ் சினிமாவை அச்சுறுத்தும் மிரட்டல் பேர்வழிகள்!

பட ரிலீஸ் நேரத்தில் பஞ்சாயத்து.... தமிழ் சினிமாவை அச்சுறுத்தும் மிரட்டல் பேர்வழிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இப்போது அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள் இவை: "சினிமா எடுக்கறதை விட, அதை ரிலீஸ் பண்றதுதான் பெரும் பாடா இருக்கு".

அது எந்த அளவுக்கு உண்மை என்பதை நேற்று மொத்த தயாரிப்பாளர்களும் நேரில் பார்த்தார்கள். தங்கள் ஒற்றுமையைக் காட்டி ஒரு படத்துக்கான சிக்கலையும் தீர்த்தார்கள்.

Blackmailers in Tamil Cinema

அந்தப் படம் மொட்ட சிவா கெட்ட சிவா. படத்தை வெளியாக விடாமல் தடுத்துக் கொண்டே இருந்தவர்கள் லிங்காவுக்கு பிரச்சினை கொடுத்த அதே சிங்காரவேலன் மற்றும் எப்போது பார்த்தாலும் வழக்குப் போட்டுக் கொண்டே இருக்கும் பைனான்ஸ் பார்ட்டி போத்ரா.

தமிழ் சினிமாவில் வெளிப்படைத் தன்மை என்பதை இம்மியளவுக்குக் கூட கிடையாது. எதற்காக படத்தைத் தடுத்து நிறுத்துகிறோம் என்ற உண்மையான காரணத்தை கடைசிவரை சொல்லவே மாட்டார்கள். கடைசி வரை இழுத்தடிக்க வைத்து, அந்தப் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பைக் கொன்று, படத்தையும் காலி பண்ணி விடுகிறார்கள் இந்த மாதிரி பைனான்ஸ் பார்ட்டிகள்.

மொட்ட சிவா கெட்ட சிவா பட விவகாரத்திலும் இதுதான் நடந்தது. "இந்தப் படத்துக்காக பைனான்ஸ் கொடுத்ததாக போத்ரா சொன்னதெல்லாம் பொய். அவர் மதனிடம் பணம் கொடுத்தது வேறு விவகாரத்துக்காக. ஆனால் கையெழுத்து வாங்கி வைத்திருந்த வெற்றுத் தாள்களை படத்துக்கு எதிராகப் பயன்படுத்தி வழக்குப் போட்டதாகச் சொல்கிறார்கள்," தயாரிப்பாளர் தரப்பில்.

பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாக தயாரிப்பாளர் கூறியதை ஏற்று ஆரம்பத்தில் சும்மா இருந்த சிங்கார வேலன் தரப்பு, சரியாக ரிலீஸ் நேரத்தில் முட்டுக்கட்டை போட்டது.

இதெல்லாம் அந்தப் படத்தின் மீதிருந்த பெரும் எதிர்ப்பார்ப்பைக் குறைத்தது. காரணம் காஞ்சனா 2-ன் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு வரும் படம் இது. குறிப்பாக ராகவா லாரன்சுக்கு குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இது பெரிய ஓபனிங்குக்கு உதவும். அதைக் கெடுப்பதுதான் இந்த மாதிரி நபர்களின் நோக்கமாக இருக்கிறது.

"மொட்ட சிவா கெட்ட சிவா படம் இந்த முறை தப்பியதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர்களின் ஒற்றுமைதான். எல்லோரும் ஒருங்கிணைந்து போராடி, மிரட்டல் பேர்வழிகளை ஓடவிட்டார்கள். இந்த நிலை தொடர்ந்தால் மிரட்டல் பார்ட்டிகள் தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போவார்கள். தமிழ் சினிமா வெளியீடு ஆரோக்கியமாக இருக்கும்...," என்கிறார் மொட்ட சிவா கெட்ட சிவா வெளியாக உதவியவர்களுள் ஒருவரான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

English summary
Some blackmailers have threatened the producer of Motta Siva Ketta Siva in release time. But the unity of film producers defeated them and helps to release movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil