இதுதான் ரியல் ஃபன் பண்றோம்.. ரியோவை வச்சு செஞ்ச பிளாக்ஷீப் டீம்.. என்ன விஷயம்னு தெரியுமா?
சென்னை: ரியோவின் மனைவி ஸ்ருதி பிக் பாஸ் வீட்டிற்குள் ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது வந்த நிலையில், குழந்தை, குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் வீடியோ மெசேஜ் ஒன்றும் போட்டுக் காண்பிக்கப்பட்டது.
Recommended Video
நடிகர் ரியோ ராஜின் முதல் படத்தை இயக்கிய பிளாக்ஷீப் யூடியூப் குழுவினர் அந்த வீடியோ மெசேஜ் இறுதியில் நல்லாவே ஃபன் பண்ணியிருந்தனர்.
ரியோ ராஜின் குட்டிப்பாப்பா வீடியோவும் அம்மாவின் வாழ்த்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

எல்லாமே ஹேப்பி
ஷிவானி அம்மா அதிரடி ஆட்டம் ஆடிச் சென்ற நிலையில், அதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த அனைவருமே ரொம்பவும் ஹேப்பியாக பேசிவிட்டு ஊக்கப்படுத்தி விட்டு சென்றனர். ரியோ ராஜின் அன்பான மனைவியும் ரொம்பவே பாசிட்டிவ் எனர்ஜியை ரியோவுக்கு கொடுத்து விட்டு சென்றார்.

குட்டிப்பாப்பா வீடியோ
நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான ரியோ ராஜ் தனது மனைவியிடம் குழந்தை வந்திருக்கா என ஒரு சந்தேகத்துடனே கேட்டார். ஆனால், அதற்கு அவர் இல்லை என மறுத்தார். குவாரண்டைன் காரணமாக குழந்தையை அழைத்து வரவில்லை. அதற்கு பதிலாக வீடியோவில் குழந்தை பேசுவதை கண்டதும் ரியோ மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

குடும்பத்தினர் வாழ்த்து
ரியோ நல்லா விளையாடுறப்பா, கவலைப்படாத, ஜெயிச்சிட்டு வா என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் நண்பர்களும் அந்த வீடியோ மெசேஜில் ரியோவுக்கு நல்லாவே ஆறுதலும் மோட்டிவேட்டும் செய்தனர். வீடியோவில் தனது அம்மாவை பார்த்ததும் மீண்டும் ரியோ அழ ஆரம்பித்து விட்டார்.

பிளாக்ஷீப் டீம்
யூடியூப் தளத்தில் பிரபலமான பிளாக்ஷீப் டீம் அந்த வீடியோவின் இறுதியில் தோன்றி, பழனிச்சாமி நீ இல்லாம ரொம்ப வருத்தப்படுறோம்ப்பா.. என கலாய்த்து, பின்னர் ஒவ்வொருவரும் லெக் பீஸை எடுத்து கடிக்கும் வீடியோவை வெளியிட்டு ரகளை செய்து விட்டனர். கார்த்திக் வேணுகோபால் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ரியோவை அல்டிமேட்டாக கலாய்த்தனர்.

ரியோவோட அட்டி
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிளாக்ஷீப் டீம் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த பிளாக்ஷீப் டீம் குழுவும் ரியோவுக்கு சூப்பரான வாழ்த்துக்களை சொல்ல, அழுத மனுஷனை கடைசியில் சிரிக்க வைத்து விட்டனர். இப்படித்தான் குடும்பத்தினர் போட்டியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், ஷிவானி அம்மா செய்தது போல செய்யக் கூடாது என்றும் மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் வெடித்துள்ளன.


Click it and Unblock the Notifications











