Bloody Sweet: கோல்ட் காயினில் லியோ டைட்டில்.. சாக்லேட் ஃபேக்டரியும் கூர்வாளும்.. தெறிக்குது!

சென்னை: கோல்ட் காயினில் லியோ டைட்டில், சாக்லேட் ஃபேக்டரி, பட்டறையில் கூர்வாள் உருவாக்குவது என லியோ படத்தின் இன்ட்ரோ ப்ரோமோ வீடியோவே புதுசாகவும் ரசிக்கும்படியும் சாக்லேட்டை விஜய் ருசிப்பது போல ருசிக்கும் படியும் உருவாகி உள்ளது.

பிளடி ஸ்வீட் என விஜய் ப்ரோமோ வீடியோவில் பேசியதை பார்த்த ரசிகர்கள் அடுத்த கணமே #BloodySweet ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் படத்தின் ரிலீஸ் அக்டோபர் 19ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதமே அக்டோபர் மாதம் வராதா என விஜய் ரசிகர்கள் காலண்டரை கிழிக்கத் தொடங்கி விட்டனர்.

பிளடி ஸ்வீட்

பிளடி ஸ்வீட்

தளபதி 67 படத்துக்கு ஈகிள், குருதி, குருதிப்புனல், ராய்ஸ் என ஏகப்பட்ட டைட்டிலை ரசிகர்கள் கெஸ் செய்து வைத்த நிலையில், வித்தியாசமாக லியோ என்கிற டைட்டிலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வைத்துள்ளார். சிம்ம ராசியை குறிக்க லியோ என்கிற சிங்கத்தின் வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ப்ரோமோ இறுதியில் கூர்வாளை சாக்லேட்டால் நிரப்பி அதை தொட்டு ருசித்துப் பார்க்கும் போது பிளடி ஸ்வீட் என விஜய் பேசிய வசனத்தை பார்த்த ரசிகர்கள் உடனடியாக #BloodySweet ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஆயுதபூஜைக்கு ஆயுதம் ரெடி

ஆயுதபூஜைக்கு ஆயுதம் ரெடி

இந்த ஆண்டு தீபாவளிக்கு லியோ படம் வரும் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஆயுத பூஜை விடுமுறைக்கே வருகிறோம் நண்பா என வெயிட் காட்டி ரிலீஸ் தேதியை இப்பவே அறிவித்துள்ளனர். ஆயுத பூஜை இந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி திங்கட்கிழமை வரும் நிலையில், அக்டோபர் 19ம் தேதி வியாழக்கிழமை லியோ படம் வெளியாக உள்ளது. வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் விஜயதசமி செவ்வாய் என வசூல் வேட்டைக்கு பக்கா பிளான் போட்டு ஆயுதத்தை ரெடி செய்து வருகின்றனர்.

ஹாலிவுட் ஸ்டைல்

ஹாலிவுட் ஸ்டைல்

காஷ்மீரில் படக்குழு ஷூட்டிங் சென்ற நிலையில், படத்தின் ப்ரோமோ காட்சிக்காக முன்பே படக்குழு சென்று இப்படியொரு விஷுவலை ஷூட் பண்ணி உள்ளனரா என ரசிகர்கள் வியந்து வருகின்றனர். ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்காக இருக்கு லோகேஷ் கனகராஜ் என ரசிகர்கள் லியோவின் இன்ட்ரோ வீடியோவை பாராட்டி வருகின்றனர்.

கோல்ட் காயின்

கோல்ட் காயின்

கோல்ட் காயின் மாஃபியா என ட்ரோல் செய்யப்பட்டு வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே கோல்ட் காயின் டிசைனில் உருவாக்கப்பட்ட சாக்லேட் டிசைனில் லியோ டைட்டிலை டிசைன் செய்து மிரட்டி உள்ளனர். சாக்லேட் மீது ரத்தக்கறையும் உள்ளது. வெறும் சாக்லேட் மட்டுமா அல்லது தங்கக் கடத்தலை கையில் எடுத்திருக்கிறாரா லோகேஷ் கனகராஜ் என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

டிரக்ஸ் இருக்குமா

டிரக்ஸ் இருக்குமா

சாக்லேட் மூலம் டிரக்ஸ் கடத்தலும் நடைபெற்று வரும் நிலையில், அப்படியொரு விஷயத்தை செய்யும் நெகட்டிவ் ஷேடில் விஜய் நடிக்கப் போகிறாரா என்றும் ஏகப்பட்ட கதைகள் இந்த ப்ரோமோவை பார்த்த பின்னர் உருவாகி வருகிறது. ரோலக்ஸ் தேள் ஸ்கார்ப்பியோ என்றால் அதற்கு மேல் சிங்கம் லியோவாக விஜய் இருப்பாரா? என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன. ஈகிள் பறந்து வரும் காட்சியை வைத்து இது கன்ஃபார்ம் எல்சியூ தான் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X