Don't Miss!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- News
தமிழ்நாடு தன்னுரிமை கழகம்.. புதிய கட்சியை துவக்கிய ‛சர்க்கார்’ வில்லன் பழ கருப்பையா.. கொடிய பாருங்க!
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பரோட்டாவிற்கு மாவு பிசைகிறாரா அஜித்... இவரோட கமெண்ட்டை பாருங்க!
சென்னை : நடிகர் அஜித், ஹுமா குரேஷி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ளது வலிமை.
இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள போதிலும் வசூலில் பின்னி பெடலெடுத்து வருகிறது.
முதல் நாளிலேயே அண்ணாத்த உள்ளிட்ட மற்ற முன்னணி படங்களை ஓரங்கட்டியுள்ளது.
ரஜினி, விஜய்யை பின்னுக்குத் தள்ளிய அஜித்.. வலிமை படத்தின் 2ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வலிமை படம்
நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் கலக்கல் காம்பினேஷனில் வெளியாகியுள்ளது வலிமை படம். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் கடந்த இரு தினங்களில் உலகளவில் வசூல் மழையை பொழிந்துள்ளது. அமெரிக்காவில் படம் திரையிடப்பட்ட நிலையில் அங்கும் வசூலில் சாதனை படைத்துள்ளது.

சிறப்பான வசூல்
உலகளவில் 4000 திரையரங்குகளில் வெளியான வலிமை படம் சிறப்பான வசூலை பெற்றுள்ளது. முதல்நாள் கலெக்ஷனில் தமிழகத்தில் மட்டும் 25 கோடி வசூல் செய்துள்ளது. கடந்த தீபாவளியன்று வெளியிடப்பட்ட சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படத்தின் முதல்நாள் வசூலையும் வலிமை படம் ஒரு கோடி ரூபாய் வித்தியாசத்தில் பீட் செய்துள்ளது.

இந்திய பாக்ஸ் ஆபீஸ் தகவல்
இந்திய பாக்ஸ் ஆபீஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அண்ணாத்த படத்தின் முதல் நாள் தமிழக கலெக்ஷன் 24 கோடி ரூபாயாக உள்ளது. இதேபோல கடந்த 2018ல் வெளியான விஜய்யின் சர்க்கார் மற்றும் 2019ல் வெளியான பிகில் படங்கள் முறையே 23 மற்றும் 20 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி படங்களை பீட் செய்த வலிமை
இதேபோல கடந்த 2016ல் வெளியான ரஜினிகாந்தின் கபாலி படம் 19.5 கோடி ரூபாயை தமிழக முதல் நாள் வசூலாக பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படம் 19.5 கோடி ரூபாயை தமிழக முதல் நாள் வசூலாக பெற்றுள்ளதாகவும் இந்திய பாக்ஸ் ஆபீஸ் தெரிவித்துள்ளது.

14 நிமிட காட்சிகள் கட்
ஆயினும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இன்று முதல் படத்தின் 14 நிமிட காட்சிகளை ட்ரிம் செய்யவுள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து படம் ரசிகர்களுக்கு மேலும் சிறப்பான அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கலாம்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
அஜித்தை எப்போதுமே சண்டை காட்சிகளை செய்ய சொன்னால் அதிரி புதிரியாக செய்வார். ஆனால் நடனக் காட்சிகளில் தடுமாறுவார். இதையொட்டி சமீபத்தில் வெளியான ஆன்டி இந்தியன் படத்தை இயக்கிய ப்ளூ சட்டை மாறன் அஜித்தை கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video

பரோட்டாவிற்கு மாவு பிசையும் அஜித்
அஜித் படத்தில் நாங்க வேற மாதிரி பாடலில் பரோட்டாவிற்கு மாவு பிசைவதாகவும் அந்த டான்சை திரையரங்குகளில் சிரிக்காமல் பார்த்தவர்கள் யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ட்வீட் அஜித் ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் படத்தின் நிறைகளை சுட்டிக் காட்டாமல், குறையை சுட்டிக் காட்டிய ப்ளூ சட்டை மாறனை அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் வசை பாடி வருகின்றனர்.