Don't Miss!
- News
காட்பாடிக்கு அப் அண்ட் டவுன் ரயில் பயணம்! முதல்வர் ஸ்டாலினின் முதல் கள ஆய்வு! 2 நாள் டூர் சார்ட்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Finance
பட்ஜெட் 2023: வரலாற்று நிகழ்வு.. பெண் ஜனாதிபதி, பெண் நிதி அமைச்சர்..! களைகட்டும் நாடாளுமன்றம்..!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடுத்த சர்ச்சையை துவங்கிய ப்ளூ சட்டை மாறன்... இந்த முறை எந்த ஹீரோன்னு பாருங்க!
சென்னை : இயக்குநரும் பிரபல விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன், தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் படங்கள் வெளியாகும்போது உடனடியாக விமர்சனங்களை கொடுத்து வருகிறார். அனைவரும் பாசிட்டிவ்வாக சொல்லும் படங்களையும் இவர் விமர்சித்து அந்த ஹீரோக்களின் ரசிகர்களிடம் மாட்டிக கொள்கிறார்.
Recommended Video
தயாரிப்பாளராகிறாரா
தோனி?...
நயன்தாராவை
வைத்து
படம்
எடுக்கிறாரா?...உண்மை
என்ன?...புதிய
தகவல்

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்றைய தினம் டான் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தற்போது பாசிட்டிவ்வான கமெண்ட்களையே வாங்கி வருகிறது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அத்தகைய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன் என்ற விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.

டாக்டர் படம்
முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படமும் சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் குவித்தது. கொரோனா நேரத்தில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசான நிலையிலும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

டான் படம்
இந்நிலையில் தற்போது அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது டான் படம். இந்தப் படத்தின் விமர்சனங்கள் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தில் ரசிகர்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிறப்பு காட்சிகள்
காலை 4 மணிக்கு சிறப்பு ஷோ திரையிடப்பட்டது. தொடர்ந்து வெற்றி திரையரங்கில் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் இணைந்து ரசிகர்களுடன் படத்தை பார்த்துள்ளனர். ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்து உற்சாகமாக சென்றனர். ரசிகர்கள் அவர்களுடன் இணைந்து வீடியோக்களும் எடுத்துக் கொண்டனர்.

ப்ளூ சட்டை மாறன் மறைமுக தாக்குதல்
இந்நிலையில் இந்தப் படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மறைமுகமாக தாக்கியுள்ளார். அதிகாலை ஷோ, திரையிடப்பட்ட நிலையில், திரையரங்கில் அனைவரும் பெட்ஷீட் சகிதம் வந்து தூங்குவதாக அவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். டான் படத்தை அனைவரும் சிறப்பாக பேசிவரும் நிலையில், இவர் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் கோரிக்கை
ஒவ்வொரு திரைப்படும் மிகுந்த சிரமங்களுக்கு இடையில் வெளியாகி ரசிகர்களை சென்றடைகிறது. இந்நிலையில் விமர்சனங்களை கூறுவதாக இத்தகையோர் செய்யும் அலப்பறைகள் எப்போதுமே மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. பீஸ்ட் படம் வெளியான போதும் விமர்சனங்களை உடனடியாக சொல்லாமல் ரசிகர்களை படத்தை என்ஜாய் செய்ய விடுங்கள் என்ற கோரிக்கைகள் வலுத்தன.

ரசிகர்கள் ஆத்திரம்
இந்நிலையில் ஒவ்வொரு படம் வெளியாகும்போது, அதன் நிறைகளை கூறாமல், குறைகளை மட்டுமே பட்டியலிட்டு வரும் ப்ளூ சட்டை மாறன் தற்போது இத்தகைய புகைப்படத்தை வெளியிட்டு டான் படத்தை தாக்கியுள்ளது குறித்து அவரது ரசிகர்கள் ஆத்திரமடைந்து பதில் கமெண்ட் அளித்து வருகின்றனர்.