பப்ளிசிட்டி பிடிக்காது..ஆனா வருடம் 365 நாளும் போட்டோ போடுவாராம்..அஜித்தை சீண்டும் ப்ளூசட்டை மாறன்

சென்னை : தொடர்ந்து நடிகர் அஜித்தை வம்புக்கு இழுத்து ட்வீட் போட்டு வரும் ப்ளூசட்டை மாறன் மீது அஜித் ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர். அவரை விடாமல் திட்டி தீர்த்து வருகின்றனர்.

படங்களை விமர்சனம் செய்வதை தாண்டி, டாப் நடிகர்களை கிண்டல், கேலி செய்து ப்ளூசட்டை மாறன் போட்டு வரும் ட்வீட் சினிமா ரசிகர்களிடம் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களையும் கூட இவர் விமர்சித்து வருகிறாரே என பலரும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இதில் அதிக கோபத்தில் இருப்பவர்கள் அஜித் ரசிகர்கள் தான். வலிமை படத்தில் நாங்கள் வேற மாதிரி பாடலுக்கு அஜித் நடனமாடியதை பாடிசேமிங் செய்து ப்ளூசட்டை மாறன் ட்வீட் போட்டார். இதற்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நடிகர்களை விமர்சிக்கும் ப்ளூசட்டை மாறன்

நடிகர்களை விமர்சிக்கும் ப்ளூசட்டை மாறன்

ப்ளூ சட்டை மாறனை நேருக்கு நேராக திட்டி தீர்த்த பிரபலங்கள், சோஷியல் மீடியாவில் திட்டிய அஜித் ரசிகர்களையும் கண்டபடி திட்டி, ப்ளூசட்டை மாறன் ட்வீட் போட்டார். அஜித்தை தொடர்ந்து விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களை பற்றியும், அவர்களின் படங்களைப் பற்றியும் கண்டபடி விமர்சித்தார் ப்ளூசட்டை மாறன்.

அஜித்தின் ஐரோப்பா டூர்

அஜித்தின் ஐரோப்பா டூர்

இந்த சமயத்தில் அஜித் தற்போது ஐரோப்பா டூர் சென்றுள்ளார். அங்கு அஜித் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி செம டிரெண்டாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் ஏகே 61 படத்துடன் சேர்த்து அஜித்தின் போட்டோக்களையும் அதிகமாக பகிர்ந்து, கொண்டாடி வருகின்றனர். அஜித் பயன்படுத்திய கார், பைக் என அனைத்தை பற்றிய விபரங்களையும் தேடி பார்த்து வருகின்றனர்.

அஜித்தை வம்பிழுக்கும் ப்ளூசட்டை மாறன்

அஜித்தை வம்பிழுக்கும் ப்ளூசட்டை மாறன்

அஜித்தின் பைக் ரைட், கார் டிரைவ், பெல்ஜியத்தில் சாதாரணமாக ரோட்டில் நடந்து சென்றது போன்ற போட்டோக்கள் செம வைரலாகி வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே அஜித்தின் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றும் அதே போல் ஒரு செட் போட்டோக்கள் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இதை வைத்து அஜித்தை வம்புக்கு இழுத்து ட்வீட்டை ஒன்றை பதிவிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

பப்ளிசிட்டி பிடிக்காதாம்...போட்டோ வருமாம்

பப்ளிசிட்டி பிடிக்காதாம்...போட்டோ வருமாம்

அதில், தனது படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்கள், தனது படங்களின் ப்ரொமோஷனுக்கு போக மாட்டார். விருது விழாக்கள், பேட்டிகள் ஆகியவற்றை தவிர்ப்பார். ஆனால் வருஷத்துக்கு 365 போட்டோக்களை நம்மாள் பார்க்க முடிகிறது. ஏன்னா அஜித்திற்கு பப்ளிசிட்டி பிடிக்காதாம். அவருக்கு தெரியாம, அனுமதி இல்லாம போட்டோ போடறாங்க. நம்புங்கண்ணே. நம்புங்க என நக்கலாக, அஜித்தின் போட்டோவுடன் ட்வீட் போட்டுள்ளார்.

கடுப்பான அஜித் ரசிகர்கள்

கடுப்பான அஜித் ரசிகர்கள்

ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்வீட்டால் அஜித் ரசிகர்கள் செமவே கடுப்பாகி விட்டனர். அது அவரோட தனிப்பட்ட விருப்பம். அவர் போட்டோ 365 நாளும் ரசிகன் கூட எடுத்தது தான் வருது. அதுக்கு 5000 ஆட்டய போடுற ஆள் அவரில்ல. வெளிய வரலேனா வரலனு சொல்றது. வந்தா போட்டோ போட்டு பப்ளிசிட்டி பன்றாருனு சொல்றது. இந்தியாவிலே எந்த நடிகரும் இவர மாதிரி சாதாரண மக்களோட போட்டோவுக்கு போஸ் கொடுக்குறது இல்ல. நாமளே பக்கத்து ஊருக்கு போனா போட்டோ எடுத்து வாட்ஸ்ஆப் ஸ்டோரி, இன்ட்ஸ்கிராம், ஸ்னாப் எல்லாம் பண்றோம். இதுல அவர் பண்றதுக்கு என்ன.

அது அவரோட இஷ்டம்

அது அவரோட இஷ்டம்

இவர என்ன பண்றதுன்னே தெரியலியே. சென்னையில் எங்கயாவது கண்ணுல படுவாருன்னு பார்க்குறேன். நடக்க மாட்டேங்குது. நீங்களும், உங்க வீட்டுல இருக்கவங்களும் சாப்பாடு சாப்டறதுக்கு அஜித் பப்ளிசிட்டி உங்களுக்கும் தேவைப்படுதுல. அது மாதிரி 365 டுவீட் போடுங்க. 365 நாள் நிம்மதியா சோறு சாப்டலாம். ஆடியோ வியாவிற்கு போறது, போகாதது அவரோட விருப்பம். அத பற்றி ஃபேன்ஸ் தான் கவலை படனும். உங்களுக்கு என்ன வந்துச்சு என கண்டபிடி திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X