Don't Miss!
- Finance
கச்சா எண்ணெய் இறக்குமதி இன்னும் ரஷ்யாவில் இருந்து அதிகரிக்கலாம்.. காரணத்தை கேட்டா கடுப்பாகிருவீங்க!
- News
பிரதமர் மோடி பிபிசி ஆவணப்படத்தை.. மொபைலில் பார்த்த சிபிஎம் சென்னை கவுன்சிலர் உள்ளிட்டோர் கைது!
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
துணிவுக்கு நெகட்டிவ் விமர்சனம்.. ப்ளூ சட்டை, பிரசாந்துக்கு ஒரு கோடி.. என்னென்ன சொல்றான் பாருங்க!
சென்னை: பாட்ஸ் வச்சு எப்படியாவது வாரிசு டீம் ட்ரெய்லர் சாதனை படைக்கும் என சொல்லி வந்த அஜித் ரசிகர்கள் அடுத்த கட்டத்திற்கே சென்று துணிவு படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுக்க ப்ளூ சட்டை மாறன் மற்றும் பிரசாந்த் ரங்கசாமிக்கு நடிகர் விஜய் ஒரு கோடி கொடுத்தார் என உருட்ட ஆரம்பித்துள்ளனர்.
ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் ட்ரெய்லரை பார்த்து விட்டு வாரிசு படமா துணிவு படமா என்பதே தெரியாமல் போதையில் உளறும் வீடியோ டிரெண்டாகி வருகிறது.
மறுபக்கம் வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களும் வலிமை மற்றும் பீஸ்ட் வைபையே கொடுப்பதாக ட்ரோல்கள் பறக்கின்றன.

ப்ளூ சட்டை மாறனுக்கு ஒரு கோடியா
வாரிசு மற்றும் துணிவு படங்கள் வரும் ஜனவரி 11ம் தேதி நேரடி மோதலில் ஈடுபடவுள்ளன. துணிவு படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் சொல்ல நடிகர் விஜய் மற்றும் வாரிசு டீம் ப்ளூ சட்டை மாறனுக்கும் பிரசாந்த் ரங்கசாமிக்கும் தலா ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக அஜித் ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ள ட்வீட்டை ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட் டிரெண்டாகி வருகிறது.
|
அட டேய்
அய்யோ யாரு பெத்த பிள்ளையோ தெரியலையே என்கிற வடிவேலுவின் எபிக் ட்ரோல் டெம்பிளேட்டை போட்டு ப்ளூ சட்டை மாறன் அந்த ட்வீட்டை பங்கமாக கலாய்த்து தள்ளி உள்ளார். கமெண்ட் செக்ஷன் முழுவதும் ஒரு கோடிப்பே.. வயித்தெரிச்சல்ப்பே என கலாய்த்து வருகின்றனர்.

யார் கொடுக்கிறா சொல்லுங்க
விமர்சகரும் நடிகருமான இட்டிஸ் பிரசாந்த் என அழைக்கப்படும் பிரசாந்த் ரங்கசாமி, "யார் கொடுக்கிறான்னு சொல்லுங்க போய் வாங்கிக்கிறேன். என் பேரு சொல்லி வேற எவனா வாங்கிக்கப் போறான்" என ட்வீட் போட்டு அந்த அஜித் ரசிகரை மரண கலாய் கலாய்த்துள்ளார்.

அஜித் ரசிகர்களுக்கு பயம்
ஏற்கனவே பீஸ்ட் மாதிரி இருக்கு மணி ஹெய்ஸ்ட் மாதிரி இருக்குன்னு ட்ரோல் பண்ண நிலையில், நேரடியாக ஒரே நாளில் போட்டிக்கும் வாரிசு படம் வருகிறதே என்கிற பயம் தான் அஜித் ரசிகர்களை இப்படியெல்லாம் ட்வீட் போட வைத்துள்ளது என விஜய் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

பீஸ்ட், வலிமை வைப்
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் பீஸ்ட் மற்றும் வலிமை வைபை தான் தருகிறது என்றும் இரண்டு படங்களுக்கும் அதிகபட்சமாக நெகட்டிவ் விமர்சனங்கள் தான் குவியும் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த ஆண்டும் வேற ஏதாவது தமிழ் படம் தான் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்க போகிறது இவங்க ரெண்டு பேரும் ஒரு ஓரமாய் போய் சண்டை போடுங்கடா என யார் சொல்லப் போகிறார் என வெயிட் பண்ணி பார்ப்போம் என கலாய்த்து வருகின்றனர்.