ஒரு ட்வீட்டை நியாயப்படுத்த இவ்வளவு மெனக்கெடும் ப்ளூ சட்டை மாறன்...இப்படி ஒரு பப்ளிசிட்டியா ?
சென்னை : வலிமை படத்தில் அஜித் ஆடிய டான்ஸ் விமர்சித்து ஒரு ட்வீட்டை போட்டதற்காக ப்ளூ சட்டை மாறனை பலரும் வறுத்தெடுத்து வருகிறார்கள். இருந்தாலும் தான் போட்ட ட்வீட்டை நியாயப்படுத்த ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார்.
அஜித் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி ரிலீசானது. இந்த படம் பற்றி பலரும் விமர்சனம் வெளியிட்டனர். வழக்கம் போல் வலிமை படத்தையும் விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன், தொடர்ந்து வலிமை படத்தில் அஜித் டான்ஸ் ஆடிய போட்டோவை பதிவிட்டு, பரோட்டாவிற்கு மாவு பிசையும் இந்த டான்சை தியேட்டரில் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியாது என ஒரு ட்வீட் போட்டார்.

ப்ளூ சட்டை மாறனை கண்டித்த பிரபலங்கள்
இந்த ட்வீட்டை வைத்து அஜித் ரசிகர்கள், ப்ளூ சட்டை மாறனை விட்டு விளாசினர். திரை பிரபலங்கள் பலரும் இந்த கண்டித்த நிலையில், வேம்புலி நடிகர் ஜான் கொக்கனும், அடுத்தவனை மிதிச்சு முன்னேறனும்னு நெனைக்காதீங்க என கூறி உள்ளார். இருந்தாலும் தான் போட்ட ட்வீட்டை நியாயப்படுத்துவதற்காக தொடர்ந்து பல ட்வீட்களை பதிவிட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

இரட்டை அர்த்த பாடலில் நடித்தாரா அஜித்
அஜித் நடித்த ரெட் படத்தில் வரும் ஒல்லி குச்சி உடம்புக்காரி பாடலில் வரிகளை குறிப்பிட்டு, இரட்டை அர்த்தம் கொண்ட இந்த பாடலில் பெண்களை இழிவுபடுத்தி எழுதி உள்ளனர். பெண்களை தரக்குறைவாக நினைக்கும் ஒருவரால் தான் இது போன்ற வரிகளை எழுதவோ, நடிக்கவோ முடியும் என குறிப்பிட்டுள்ளார். ஒல்லி, குண்டு என சொல்லும் இது போன்ற வார்த்தைகள் மட்டும் பாடிசேமிங் ஆகாதா. இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியாதா என கேட்டுள்ளார்.

பால் பாக்கெட்டை இப்படியா வீணடிப்பது
அதோடு நிறுத்தாமல், வலிமை ரிலீசின் போது அதிகாலையில் ரசிகர்கள், போக்குவரத்திற்கு இடையூறு செய்தார்கள். அஜித்தின் கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய வழியில் சென்ற வாகனத்தில் இருந்து அஜித் ரசிகர்கள் பால் பாக்கெட்களை திருடி உள்ளனர். இதெல்லாம் சரியா. குழந்தைகள், பெரியர்களுக்கு பயன்படும் அத்தியாவசிய உணவு பொருளான பால் பாக்கெட்களை இப்படியா வீணடிப்பது என ட்வீட் செய்துள்ளார். அஜித்தையும் அவரது ரசிகர்களையும் கடுமையாக விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார்.

இப்படி ஒரு பப்ளிசிட்டி தேவையா
ஆனால் ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்வீட்களை நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சித்து, கலாய்த்து வருகின்றனர். அஜித் நடித்த ரெட் படம் ரிலீசாகி எத்தனை ஆண்டுகள் ஆகிறது. இதுவரை நீங்கள் அந்த படத்தையும் பாட்டையும் பார்க்காமலும் கேட்காமலுமா இருந்தீர்கள். ஒரு ட்வீட்டை நியாயப்படுத்த எவ்வளவு பழைய விஷயத்தை தோண்டி எடுத்து, இப்போது அதை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். பால் பாக்கெட் திருடப்பட்ட விஷயமும், வீடியோவும் வெளியாகி ஒரு வாரமாச்சு, இப்போது தான் இந்த சமூக அக்கறை உங்களுக்கு வந்துள்ளதா...இத்தனை நாளாக எங்கே போயிருந்தீர்கள். அஜித்தையும், வலிமையையும் தாக்கி இப்படி ஒரு பப்ளிசிட்டி உங்களுக்கு தேவையா என கேட்டு விட்டு விளாசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











